கற்பழித்துவிட்டதாக 15 ஆண்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய பெண்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரித்தானிய நாட்டில் கற்பழித்துவிட்டதாக 15 அப்பாவி ஆண்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணிற்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து தலைநகரான லண்டனுக்கு அருகில் உள்ள Hounslow நகரில் Jemma Beale(25) என்ற பெண் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2010 முதல் 2013 வரை தன்னை பல்வேறு ஆண்கள் பாலியல் சித்ரவதை செய்ததாக பொலிசாரிடம் 2013-ம் ஆண்டு புகார் கூறியுள்ளார்.

இவர்களில் 6 பேர் பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும், 9 பேர் தன்னை கற்பழித்ததாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் விரிவான விசாரணையை தொடங்கியுள்ளனர்.

புகார் கூறிய பெண்ணின் தோழி ஒருவருடன் விசாரணை செய்தபோது அவர் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

‘பாலியல் தாக்குதல் நடத்தியதாகவும், தன்னை கற்பழித்து விட்டதாகவும் ஆண்கள் மீது பொய் புகார்கள் சுமத்தி அதன் மூலம் கிடைக்கும் இழப்பீட்டு தொகையை அப்பெண் பெற்று வருவதாக’ தோழி கூறியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், இவரது பொய் புகார் காரணமாக அப்பாவி நபர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் கிடைத்துள்ளது.

மேலும், சட்டத்திற்கு அச்சப்பட்டு ஒருவர் நாட்டை விட்டே வெளியேறிவிட்டார்’ என தோழி பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தோழி அளித்த புகாரின் கோணத்தில் விசாரணை நடத்தியபோது அப்பாவி ஆண்கள் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தியது தற்போது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளாக பொலிசாரின் கடமையை தவறாக பயன்படுத்திய குற்றத்திற்காகவும், பொய்யான வாக்குமூலம் அளித்து அப்பாவிகளை தண்டிக்க முயன்ற காரணத்திற்காகவும் அப்பெண் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் 24-ம் திகதி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் அவரது குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*