மேற்கிந்திய தீவு மண்ணில் சாதனை படைத்த இந்திய அணி: விஸ்வரூபம் எடுத்த கோஹ்லி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லியின் அசத்தல் சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் ஜமைக்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதன் படி மேற்கிந்திய தீவு அணிக்கு துவக்க வீரர்களாக லிவிஸ் மற்றும் கெய்ல் ஹோப் களமிறங்கினர்.

லிவிஸ் 9-ஓட்டங்களில் பாண்ட்யா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் ஹோப், கெய்ல் ஹோப்வுடன் இணைந்து மேற்கிந்திய தீவு அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினார்.

அணியின் எண்ணிக்கை 76-ஓட்டங்களை தொட்ட போது கெய்ல் ஹோப் 46-ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சேஸ் டக் அவுட்டாக, மேற்கிந்திய தீவு அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய ஆரம்பித்தன.

பின் வரிசை வீரர்களில் ஹோல்டர்(36) மற்றும் பாவல் (31) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க மேற்கிந்திய தீவு அணி இறுதியாக 50-ஓவர் முடிவில் 9-விக்கெட் இழப்பிற்கு 205-ஓட்டங்கள் எடுத்தது.

இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களான மொகமது சமி 4-விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 3-விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

அதன் பின்னர் 206-ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணிக்கு ரகானே, தவான் களமிறங்கினர்.

தவான் 4-ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையிலும், ரகானே 39-ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையிலும் வெளியேறினர்.

மூன்றாவது வீரராக களமிறங்கிய அணியின் தலைவர் கோஹ்லி பொறுப்பை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இவருக்கு இணையாக மற்றோரு வீரரான தினேஷ் கார்த்திக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக ஆடிய தினேஷ் கார்த்திக் அரைசதம் கடந்தார். அணியின் தலைவரான கோஹ்லி சதம் அடித்து விளாசினார்.

இறுதியாக இந்திய அணி 36.5-ஓவரில் 2-விக்கெட் இழப்பிற்கு 206-ஓட்டங்கள் எடுத்து 8-விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய அணியின் தலைவர் விராட் கோஹ்லி ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

மேலும் மேற்கிந்திய தீவு மண்ணில் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*