மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள் இவை தான்!

பிறப்பு : - இறப்பு :

மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம்.

ஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது? உலகத்திலேயே மிகப்பெரிய மர்மமே மனித உடலே.

மனிதர்கள் ஏன் இவ்வளவு பெரிய மர்மமாக விளங்குகிறார்கள் என்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. அதற்கு ஒன்றும் பெரிய விளக்க சோதனையும் தேவையில்லை. உதாரணத்திற்கு, தொழிநுட்பம், அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் கூட, மனித மூளையை சுற்றியுள்ள மர்மத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மனித உடலில் இருக்கும் 7 மர்மங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இயற்கையாகவே இவையனைத்தும் மனித உடலில் உள்ள மர்மங்களே. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

மர்மம் 1: நாம் ஏன் முத்தமிடுகிறோம்?

எச்சில் பரிமாற்றத்தில் மனிதர்கள் ஏன் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அறிவியலால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது இயற்கையாகவே நடைபெறும் உணர்வு சம்பந்தப்பட்ட நிகழ்வாகும். அதற்கு பின் இருக்கும் காரணத்தை விளக்க முடியவில்லை.

மர்மம் 2: நாம் ஏன் சிரிக்கிறோம்

என்டோர்ஃபின்ஸ் நம் மனநிலையை மேம்படுத்துவதற்காக நாம் சிரிக்கும் போது நம் உடலில் சுரக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் எது சிரிப்பை வரவழைக்கிறது என்பது இன்னும் யாருக்கும் புரியவில்லை. சில நேரம் மிகப்பெரிய ஒரு நகைச்சுவை கூட சிலருக்கு சிரிப்பை வரவழைக்காமல் போகலாம்.

மர்மம் 3: நாம் ஏன் அசடு வழிகிறோம்

சரியான முறையில் அறிவியலால் பதிலளிக்க முடியாத மற்றொரு கேள்வி தான் இது. இருப்பினும் நெருக்கம் மற்றும் ஈர்ப்பை வளர்க்கும் அதிமுக்கிய காரணியாக இது விளங்குகிறது என நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த நிகழ்வு நடக்கிறதோ என்னவோ.

மர்மம் 4: குணப்படுத்தும் திறன்

மனிதர்களிடம் இருக்கும் மிகப்பெரிய மர்மங்களில் இதுவும் ஒன்றாகும். சிலருக்கு மட்டும் எப்படி குணப்படுத்தும் திறன் இருக்கிறது என்பதை பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. இந்த குணமுடையவர்கள் சிலர், இதனை அண்டத்தின் ஆற்றல் திறனிடம் இருந்து பெற்றதாக கூறுகிறார்கள். ஆனால் இது எப்படி சாத்தியமாகிறது? விடை தெரியாத மர்மம் தான்.

மர்மங்கள் என்றாலே நம் அனைவருக்கும் சுவாரஸ்யத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் நினைப்பை விட்டு வெளியேறும் அளவிலான மர்மத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதை தேடி எங்கேயும் செல்ல வேண்டாம். ஆம், மனித உடலில் இல்லாத மர்மமா வேறு எங்காவது இருக்க போகிறது? உலகத்திலேயே மிகப்பெரிய மர்மமே மனித உடலே. மனிதர்கள் ஏன் இவ்வளவு பெரிய மர்மமாக விளங்குகிறார்கள் என்பதற்கு எண்ணிலடங்கா காரணங்கள் உள்ளது. அதற்கு ஒன்றும் பெரிய விளக்க சோதனையும் தேவையில்லை.

உதாரணத்திற்கு, தொழிநுட்பம், அறிவியல் மற்றும் மருத்துவ துறையில் இவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் கூட, மனித மூளையை சுற்றியுள்ள மர்மத்தை இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை. மனித உடலில் இருக்கும் 7 மர்மங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இயற்கையாகவே இவையனைத்தும் மனித உடலில் உள்ள மர்மங்களே. ஆகவே தொடர்ந்து படியுங்கள்.

மர்மம் 5: கனவுகள்

நாம் ஏன் கனவு காண்கிறோம்? அது மூளையின் நடவடிக்கை என்றும், அது ஒருவரின் ஆயுட்காலம் வரை தொடரும் என்றும் அறிவியல் காரணம் கூறுகிறது. ஆனால் எப்படி கனவு சில நேரங்களில் நனவாகிறது? தான் கனவில் கண்டதை நிஜ வாழ்வில் சந்திக்கும் உதாரணங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. மனிதர்கள் மற்றும் அவர்களின் உடலை பற்றிய வியக்க தக்க மர்மம் தானே!

மர்மம் 6: உடலில் இவ்வளவு நீரை கொண்டு என்ன தான் செய்கிறோம்?

நம் உடலில் நான்கில் மூன்று பகுதி தண்ணீரால் நிறைந்துள்ளது. இந்த அளவு குறைந்தால், நம் உடல் இயல்பற்ற முறையில் செயல்பட தொடங்கிவிடும். தண்ணீரே மனிதர்களுக்கு பிராதனமாக விளங்குகிறது. இவ்வளவு தண்ணீரை கொண்டு நாம் என்ன தான் செய்கிறோம்?

மர்மம் 7: உயிரினவொளியாக்கம்

நோய்வாய் பட்டிருக்கும் போதோ அல்லது உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் போதோ ஒருவருக்கு உயிரின ஒளியாக்கம் ஏற்படலாம். ஹியர்வார்ட் காரிங்க்டன் என்பவர் எழுதிய “டெத்: இட்ஸ் காசஸ் அண்ட் ஃபினாமினா” என்ற புத்தகத்தில், உயிரினவொளியாக்கத்தை பற்றிய கருத்தை விளக்கியுள்ளார்.

தீவிரமான ஆஸ்துமா நோயாளி தூங்கும் போது, அவர் நெஞ்சில் இருந்து, நீல நிற ஒளி வெளிவந்துள்ளது. அதே போல், ஒரு பையன் தான் இறந்தவுடன், அவன் நெஞ்சில் இருந்து நீல நிற ஒளி வெளிவந்துள்ளது என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரினவொளியாக்கமும் மிகப்பெரிய மர்மமாக விளங்குகிறது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit