இனிக்கும் கள்ள உறவு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த சமுதாயத்தில் கள்ள உறவுக்கு தீர்வாக அமைவது கொலையும், தற்கொலையும் தான்.

திருமணம் முடிந்த பின்னர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தால் அதற்கு பெயர் கள்ளக்காதல், ஆனால் அந்த ஜோடியினரோ அதனை நல்ல காதலாகவே பார்க்கின்றனர்.

தனது மணவாழ்க்கை சீரான முறையில் அமையாமல் தனது எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத பட்சத்தில், அதனை நிவர்த்தி செய்துகொள்ளும் வாய்ப்பு எங்கு கிடைக்கிறதோ அங்கு கள்ளக்காதல் உருவாகிறது.

இதுமட்டும் ஒரு காரணமல்ல, மனிதனின் மனம் ஒரு குரங்கு போன்றது, அது நிமிடத்திற்கு நிமிடம் மாறும் குணமுடையது.

எனவே தனது வாழ்க்கை துணையைவிட சிறந்தாக ஒரு நபரை பார்க்கும் போது தங்கள் மனம் மாறி காதல் வயப்பட்டு அதனை கள்ள உறவாக்கிகொள்கிறான்.

திருமணத்திற்கு பின்னர் காலங்கள் சென்றபின்னர், தங்கள் வாழ்க்கை துணையிடம் பிடித்திருந்த சில விடயங்கள் பிடிக்காமல் போகும் பட்சத்தில் கள்ள உறவு ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி பணப்பற்றாக்குறை, குடும்பத்தில் சிக்கல்கள், கணவன் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள பெண்களும் தடம் மாறுகிறார்கள்.

மற்றொரு முக்கிய காரணம், சந்தேக புத்தி. குடும்ப வாழ்க்கையில் புயலை ஏற்படுத்தும் இந்த சந்தேக புத்தி காரணமாக, மனநிம்மதியை இழக்கும் துணை ஆறுதலுக்காக மற்றொரு நபரை தேடிச்செல்லும்போது அங்கு ஒரு புரிதல் ஏற்பட்டு உறவு ஏற்படுகிறது. அது நாளடைவில் கள்ள உறவாக மாறுகிறது.

சில பெண்கள், தங்களுக்கு வரப்போகும் கணவன் இவ்வாறு இருக்க வேண்டும் என்ற மாயபிம்பத்தை உருவாக்கி கொள்கிறார்கள்.

அப்படிப்பட்ட கணவன் அமையாத பட்சத்தில் கிடைக்கும் ஆண்களை திருமணம் செய்துகொண்டு தங்களை கட்டுப்பத்திக்கொண்டு 2 குழந்தைகள் பிறக்கும் வரை காலத்தை கடத்துகின்றனர்.

காலங்கள் செல்ல தங்களது கற்பனை நாயகனை சந்திக்கும் போது, இதுதான் நாம் எதிர்பார்த்த வாழ்க்கை என்று தடம் மாறுகின்றனர்.

இதில் சில பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக தங்கள் மனதை கட்டுப்படுத்திக்கொண்டு கிடைத்த வாழ்க்கையை வாழ்கின்றனர்.

கட்டுப்படுத்து விடயத்தில் பெண்களை விட ஆண்கள் சற்று பின்தங்கியவர்கள். அவர்களின் மனது அலைமோதுவது அதிகம் என்பதால் அவர்களால் எளிதில் கள்ள உறவில் ஈடுபட்டு விடுகிறார்கள்.

என்னதான் தனக்கு அழகான மனைவி அமைந்தாலும், அவளைவிட சற்று அழகு கூடிய பெண்ணை பார்க்கும் போது ஆண்களின் மனது சற்று தடுமாறுவது எழுதப்படாத நியதி.

ஒரு சில காலம் மட்டுமே இன்பம் தரும் இந்த கள்ள உறவுக்காக, இனிய இல்லற வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர்.

இந்த கள்ள உறவால் உயிர்கள் மாய்ந்து போனலும், இந்த உறவில் ஈடுபடுவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

காதலில் ஏது நல்லக்காதல் கள்ளக்காதல்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*