அண்டப் புளுகு மாப்பிள்ளை: ஆகாசப் புளுகு பொண்ணு : அடிதடி..வெட்டு..டைவர்ஸ்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

1.காதலிக்கும் போது நான் வல்லவன் நல்லவன்…கொடை வள்ளல், ரொம்ப ரசனையானவன் என்றெல்லாம் டுபாக்கூர் வேடம் போடும் ஆண்.

பெண்கள்…தன்னை பேரழகியாக காட்டிக் கொள்வது, நாசுக்கனவள் என்று காட்டிக் கொள்வது, ரொம்ப உயர்ந்த குணங்கள் கொண்டவளாக கட்டிக் கொள்வது..!

கல்யாணம் ஆனா மூன்றே வருடங்களில் இருவரின் வண்டவாளங்கள் உடைந்து சாயம் வெளுத்து விடும்.

2. காதலிக்கும் போது தன்னை பில்கேட்ஸ் போலவும், அம்பானி, கும்பானி யாகவும் காட்டிக் கொள்ளும் ஆண்ககள்..

செருப்பு வாங்கினாலும் செவன் தவுசனுக்கு மட்டுமே வங்கிப் பழகியவள் போல காட்டிக் கொள்ளும் பெண்கள்..

கல்யாணம் ஆன மூன்றே நாளில் பீட்ஷாவுக்கு பில் கட்டவே வழியற்றவன் என்று சாயம் வெளுத்து விடுகிறது

3. பெண்மையை மட்டுமே போற்றும் மகளிர் காவலனாக காட்டிக் கொள்ளும் காதலிக்கும் ஆண்கள்..

பெண் உரிமை, பெண்ணியம் எல்லாம் பேசி பெண்களை ஏமாற்றி காதலித்து விட்டு கல்யாணம் ஆன மூன்றே மாதத்தில், அங்கே நிற்காதே..இங்கே பார்க்காதே என்று மனைவியை படுத்தி எடுத்து சாயம் வெளுத்து சாம்பல் ஆகிவிடுகிறது.

4.மாமியார் வெளுப்பது, மச்சினி சாயம் வெளுப்பது, கணவன் நண்பர்கள் சாயம் வெளுப்பது, மாமனார் சாயம் வெளுப்பது.

கூடவே தேவதை போன்று காட்டிக் கொள்ளும் பெண்கள் கல்யாணம் ஆன மூன்றே மாதத்தில் ராட்சஷி என்று குட்டு உடைந்து சாயம் வெளுப்பது..!

இப்படி மூன்றே மாதத்தில் சாயம் வெளுப்பது தான், இன்று கோர்ட்களில் கணவன் மனைவிகள் டைவர்ஸ் கேட்டு கூட்டம் கூட்டமாக குவிக்கிறார்கள்..!

பொய்கள் இல்லாமல் காதலித்தால் குடும்பம் ஒரு கதம்பம்..!! இல்லையேல் குடும்பம் ஒரு நரகம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*