உறவுகொள்ள மனைவி வராததால் பரிதவித்த கணவன் என்ன செய்தான் தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

x

எனக்கு 36 வயது.. என் மனைவிக்கு 33 வயது.. நாங்கள் இருவரும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்தோஷமாகத்தான் இருந்துவந்தோம். ஆனால் என் மனைவி கர்ப்பமான பிறகு என்னுடன் உறவு கொள்வதை நிறுத்திவிட்டாள். அதுவும் குழந்தை பிறந்த பின்பு சுத்தமாக உடலுறவு என்பதையே நிறுத்திவிட்டாள்.

அவளுடன் உறவு கொள்ளாததால் ஏற்படும் மன உளைச்சலால் என்னால் எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை. எனது வேலையிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. என் பிரச்னைகள் குறித்து என் மனைவியிடம் தெளிவாக எடுத்துக்கூறினேன். ஆனால் என்னையும் என் பிரச்னையையும் சற்றும் பொருட்படுத்தாமல் நாம்தான் அடுத்த குழந்தைக்கு திட்டமிடலையே.. பின்ன எதற்கு என கேள்வி கேட்கிறாள்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் பிரச்னைக்கான தீர்வு என்ன? என ஒருவர் மன நல மருத்துவரிடம் கேட்டுள்ளார்.

உங்கள் மனைவிக்கு என்ன பிரச்னை? அவர்கள் மனதில் என்ன இருக்கிறது? ஏன் மறுக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவர் என்ன காரணத்திற்காக உறவு கொள்வதைத் தவிர்க்கிறார் என அறிந்துகொள்ள வேண்டும். அவரது உணர்விற்கு மதிப்பளிக்க வேண்டும். எனவே அவரும் நீங்களும் இணைந்து ஒரு நல்ல மன நல மருத்துவரை அணுகுங்கள். அவருடைய பிரச்னைகளை அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்து உங்கள் பிரச்னைக்குத் தீர்வு சொல்வார்கள் என அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit