திருமணத்திற்கு பின்னும் லூட்டி, கும்மாளம் அடிப்பேன்! வருங்கால மாப்பிள்ளைக்கு பெண்ணின் அதிர்ச்சி வைத்தியம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அவள் கிராமத்தின் அழகு தேவதை. பள்ளி ஆசிரியை before-marriage-couple-fight. ஆசிரியை பணியை புனிதமாக கருதி விரும்பி தேர்ந்தெடுத்த படிப்பு அது. ஆனால் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். அவளை ஒரு பணக்கார குடும்பம் பெண் பார்க்க வந்தது. அந்த பெண்ணின் அழகில் சொக்கி போய் அந்த பெண்ணை மருமகளாக தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்கள்.

அவர்கள் போட்ட முதல் கண்டிசன் திருமணத்திற்கு பிறகு பெண் வேலைக்கு போகக் கூடாது என்பதுதான். ஆனால் என்னால் முடியாது என பெண் கூறி விட்டாள். ஆனால் அந்த பெண்ணை விட்டு விட மனமில்லை. எனவே அடிக்கடி வந்து அந்த பெண்ணின் மனதை கரைக்க ஆரம்பித்தார்கள்.

மேலும் திருமணத்திற்கு பிறகு வேண்டுமானால் ஒரு பள்ளியையே கட்டி தருகிறோம் என கூறினார்கள். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய மகனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க மாட்டான். ஸ்ரீராமசந்திரன் போல வளர்த்து உள்ளோம் என்று கூறினார் அந்த பணக்கார தாய். இதனால் மனம் மாறிய பெண்ணின் தாய் தனது மகளிடம் ஏதேதோ பேசி சம்மதம் பெற வைத்தாள்.

மீண்டும் ஒரு நாள் பெண் பார்க்க வந்தனர். அப்போது அந்த வாலிபன் பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்றனர். அதன்படியே இருவரும் தனி அறைக்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த வாலிபன் பெண்ணிடம் பேசும்போது, எனக்கு எனது தந்தையின் கம்பெனியிலேயே ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளார்கள். எனக்கு சம்பளமாக மட்டும் மாதம் 3 லட்சம் தருவார்கள். இதனை நான் எனது செலவுக்காக வைத்து கொள்வேன். அதுவும் இல்லாமல் எனது தாயிடம் மேலும் பல ஆயிரம் ரூபாயை வாங்கி கொள்வேன்.

அது மட்டும் அல்லாமல் எனக்கு ஏராளமான பெண் தோழிகள் உள்ளனர். அவர்களுடன் நெருக்கமான பழக்கம் உள்ளது. அதனை என்னால் கைவிட முடியாது. திருமணத்திற்கு பின்னரும் நான் இதுபோல லூட்டி, கும்மாளம் அடிப்பேன். இதனை நீ தடுக்க கூடாது என்றான்.

அதோடு அந்த வாலிபன் செல்போனில் தோழிகளுடன் இருந்த நெருக்கமான புகைப்படங்களை காட்டினான். அந்த செல்போனை வாங்கி கொண்டாள். வெளியில் வந்த அந்த பெண் அவன் பேசிய அனைத்தையும் ரெக்கார்ட் செய்து அதனை அனைவர் முன்பும் போட்டு காட்டினாள்.

இதனை கேட்டு அந்த பணக்கார தாய் அதிர்ச்சி அடைந்தார். எதுவும் பேச முடியாமல் வாயடைத்து போய் திரும்பி சென்றார்கள். சில பணக்கார குடும்பம் இப்படித்தான் ஏழை பெண்களை குறி வைத்து செல்கிறார்கள்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*