அபராதம் தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்தது கூகுள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இணைய உலகில் தேடல்களை மேற்கொள்ளும் வசதியை தரும் பிரம்மாண்ட நிறுவனமான கூகுள் மீது 2.42 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டமை தொடர்பான செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

கூகுள் நிறுவனம் தனது சொந்த வியாபாரத்தினை தந்திரமாக தமது தேடல் பொறியில் விளம்பரம் செய்வதாக குற்றம் சாட்டியே இந்த அபராதத்தொகை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் பெருமளவான ஐரோப்பிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக ஐரோப்பிய ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

இதற்கு நீண்ட நாள் மௌனம் காத்து வந்த கூகுள் நிறுவனம் தற்போது முதன் முறையாக பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட எழுத்து வடிவிலான விளம்பரங்களில் மாற்றம் செய்து தற்போது படங்கள், ரேட்டிங், விலைகள் என்பவற்றினை உள்ளடக்கி விளம்பர சேவையினை தாம் வழங்கிவருவதாகவும், இது விளம்பரதாரர்களுக்கு வசதியாக இருப்பதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

மேலும் பயனர்களின் பின்னூட்டல்களை விளம்பரதாரர்களுக்கு தெரியப்படுத்தும் சேவை ஒன்றினையும் தாம் வழங்குவதாகவும் இதனால் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வியாபார நிறுவனங்கள் இந்த விளம்பரத்தினை பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இது தொடர்பாக தாம் மேன்முறையீடு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*