சைவநெறிக்கூடத்திற்கு ஐக்கிய அமெரிக்க அரசின் சுதந்திரதினக் கொண்டாட்டதிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது! – (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகத்து உயிர்கள் யாவும் வேண்டுவது விடுதலையை. முக்தி எனும் பதத்திற்கு பொருள் வீடுபேறாகும். இவ்வீடுபேறே தமிழில் விடுதலை எனவும் உரைக்கப்படுகிறது. ஆன்மீகம் உரைப்பது உயிரின் விடுதலை என்பதாகும்.

குனிந்து நடந்த இனம், நிமிர்ந்து மாந்தர்களாகிப் பண்பட்டு, ஒரு நிலத்தில் இருந்து அதில் தமது அடையாளத்தை பேணி, மொழியை, பண்பாட்டை உருவாக்கி பரந்து வாழ்ந்து, கமத்தொழிலை உருவாக்கி, நிறை வளர்ச்சி கண்டு, குடிமக்களும் நாடுகளு…ம் உருவாகி பண்பட்ட உலகம் பிறந்தது.

தொடக்கம் முதல் இன்றுவரை எந்த இடைக்கலப்பும் இல்லாமல் தனது தொன்மையுடன் பழமையைப்பேணி மிகுந்த இளமையுடன் உலகில் வாழப்படும் பண்பாடும் மொழியும் எமது தமிழ் ஆகும். எதுவிருந்தாலும் இறையாண்மை இல்லாத தொன்மை இனமாகவும் நாம் விளங்குகிறோம்.

saiva-neri-1

saiva-neri-2

saiva-neri-3

saiva-neri-4

saiva-neri-5

saiva-neri-6

saiva-neri-7

saiva-neri-8

பல்சமய இல்லத்தில் பங்காளராக விளங்கும் சைவநெறிக்கூடத்திற்கு, ஐக்கிய அமெரிக்க அரசின் சுதந்திரதினக் கொண்டாட்டதிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதராலயத்தில் 28. 06. 2017 மாலை 18.00 மணிமுதல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் சார்பில் திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் பங்கெடுத்திருந்தார்.

21 நாடுகளைச் சேர்ந்த தூதவர்களும், சுவிஸ் நடுவன் மற்றும் மாநில அரசபிரதிநிதிகளும் இவ்விழாவில் பங்கெடுத்திருந்தனர்.

04. 07. 1776ம் ஆண்டு பிரித்தானியர்களால் ஆளப்பட்ட 13 காலனிகள் முதற்தடவையாக அமெரிக்கக்கண்டத்தின் முதல் ஒன்றுகூடலை ஏற்படுத்தியிருந்தனர். முதன்முறையாக பிரித்தானிய அரச ஆவணங்களில் ஐக்கிய அமெரிக்கா எனும் சொற்பதம் பயன்படுத்தப்பட்டது. இன்றைய அமெரிக்காவின் அரசியல் யாப்பு 21. 06. 1787ல் இயற்றப்பட்டிருப்பினும் முதன்முறையாக ஐக்கிய அமெரிக்கா என சொற்பதம் பயன்படுத்தப்பட்ட நாளே அமெரிக்க சுதந்திரதினமாக நோக்கப்படுகிறது எனும் செய்தியை நினைவுகூர்ந்த சைவநெறிக்கூடம், காலச் சுழற்சியில் சாலச்சிறந்த மாற்றங்கள் நடக்க எல்லாம் வல்ல இறைவனைப் பணிந்து தனது வாழ்த்துக்களை அமெரிக்காவின் சுதந்திரத்திற்கு நவின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*