புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக Snapchat அறிவிப்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நண்பர்களுடன் சட் செய்யவும், உலகளாவிய செய்திகளை உடனுக்கு உடன் அறிந்து கொள்ளவும் Snapchat அப்பிளிக்கேஷன் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

பெருமளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இச் சேவையில் சில புதிய வசதிகள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் Snap Map எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக Snapchat நிறுவனம் அறிவித்துள்ளது.

இவ் வசதியின் ஊடாக நண்பர்கள் தமது இருப்பிடங்களை பகிர்ந்துகொள்ள முடிவதுடன், அந்த இடங்களில் நடைபெறும் நிகழ்வுகளை கண்டுமகிழவும் முடியும்.

நண்பர்கள் தமது இருப்பிடத்துடன் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்வது Actionmojis என அழைக்கப்படுகின்றது.

இவ் வசதி எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*