பூமியை அவதானிக்கும் மர்மத்தளம் பூமி தாக்கப்படுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தற்போது பூமிக்கு மிக அருகில் உள்ள நிலவை விட்டு விட்டு தொலைவில் உள்ள கிரகங்களிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அறிவியல் அதி வளர்ச்சியைப் பெற்ற பின்னரும் நிலவில் கால் பதிக்க மனிதன் முயலவில்லை, அச்சம் கொண்டுள்ளான் என்றே கூறவேண்டும்.

அதற்கு காரணம் நிலவில் மனித இனத்திற்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய உயிரினங்கள் இருப்பதாகவும், நிலவு ஓர் கண்காணிப்புத் தளம் எனவும் பூமியை தாக்க அங்கு இரகசியத்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்குலக செய்திகள் தெரிவிக்கின்றன.

1994ஆம் ஆண்டு நாசாவின் விண்கலம் நிலவின் ஒருபகுதியை புகைப்படம் எடுத்தது அப்போது அங்கு ஓர் செயற்கைத்தளம் இருப்பது பதிவு செய்யப்பட்டது.

அந்த புகைப்படம் குறித்து தெளிவான விளக்கத்தினை நாசா விஞ்ஞானிகள் கூற மறுத்தனர். எனினும் அது ஓர் செயற்கையாக அமைக்கப்பட்ட மர்மத்தளம் என்றே ஆய்வாளர்கள் கூறிவருகின்றனர்.

அதேபோல், 1972ஆம் ஆண்டு அப்பளோ 16 என்ற விண்கலம் மூலம் நிலவில் பறக்கும் தட்டு ஒன்று படம் பிடிக்கப்பட்டது.

அந்த புகைப்படம் நிலவு குறித்து மேலும் அச்சத்தை ஏற்படுத்தியது. அந்தப்படத்திற்கான விளக்கத்தை 2002ஆம் ஆண்டு நாசா வெளியிட்ட போதும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இந்தப்படத்தைத் தொடர்ந்து நிலவு தீவிரமாக கண்காணிக்கப்பட, பறக்கும் தட்டுகள் பலவும் தொடர்ந்தும் நிலவைச் சுற்றி வட்டமிடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. நிலவின் அடிக்கடி மர்ம பிரகாசமான ஒளி வட்டங்களும் தோன்றுவதும் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவற்றையும் தாண்டி நிலவில் நடமாடும் ஓர் உருவம் தொடர்பில் புகைப்படம் வெளியானது. கேமராவில் ஏற்பட்ட கேளாறு காரணமாக இந்தத் தோற்றம் உருவாகி இருக்கலாம் என்ற மறுப்பு வாதம் வெளியிடப்பட்டது.

எனினும் அந்த உருவத்தினை ஆய்வு செய்த போது அதன் நிழலும் கூட கண்டு பிடிக்கப்பட்டது. அது ஓர் உயிரினமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எனவே இந்த விடயமும் நிலவு குறித்த அச்சத்தை மேலும் வலுப்படுத்தி விட்டது.

மேலும் 2009ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்யும் வகையில் அங்கு குண்டு வெடிப்பு ஒன்றைச் செயற்படுத்த திட்டமிட்ட நாசா அதற்காக ஓர் விண்கலத்தினை அனுப்பியது.

எனினும் அது நிலவில் வெடிப்பை ஏற்படுத்தும் முன்னரே அடையாளம் காணப்படாத பொருட்கள் மூலம் தாக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பிலேயே அழிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையும் முற்றாக மறைத்த நாசா அது இயந்திரக் கோளாறு எனவும் மாற்று அறிக்கையினை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நிலவின் மேற்தளத்தில் ஓர் பறக்கும் தட்டு வடிவிலான பொருள் ஒன்று புகையைக் கக்கியவாறு பயணம் செய்யும் வகையிலும் ஓர் ஆதாரப் புகைப்படம் வெளிவந்தது.

அனைத்தையும் தாண்டி நிலவில் பூமிக்குச் சொந்தமற்ற பிரமாண்டமான விண்கலம் ஒன்றினை அப்பலோ 20 படம் பிடித்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தின் அடிப்படையிலும் நிலவு திட்டமிட்டு அமைக்கப்பட்ட இரகசியத் தளம் என ஆய்வாளர்கள் நிறுவி வருவதோடு நிலவு பூமிக்கு சொந்தம் அற்றது எனவும் கூறப்படுகின்றது.

மேலும், அண்மைக்காலமாக வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வகையான செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இவற்றோடு நிலவு மர்மமும் வெளியிடப்படக் கூடும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இவற்றில் விஞ்ஞானிகள் பூமிக்கு அருகில் உள்ள நிலவு வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பிடம் அல்லது பூமியை அவதானிக்க அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் இருக்கலாம் என தீர்மானித்துள்ளனர்.

எனவே அவர்களை சீண்டும் வகையில் ஆய்வுகளைச் செய்யாமல் இருக்கவே நிலவுப்பயணங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் விஞ்ஞானிகள் ஒரு அச்சத்திலேயே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை மாபெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பூமி இன்னும் சில காலங்களில் வாழத்தகுதி அற்றதாக மாறிவிடும். எம்மை வேற்றுக் கிரகவாசிகள் மூலமாகவே காப்பாற்ற முடியும் என்ற ஓர் கருத்தை கூறியிருந்தமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*