என் மகளுக்கு செக்ஸ் குறித்து அனைத்து விவரங்களை சொல்லி கொடுப்பேன்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரபல ஹாலிவுட் நடிகை ஸ்கார் லட் ஜொஹன்சன் அவென்சர்ஸ், அயன்மேன், கேப்டன் அமெரிக்கா,கோஸ்ட் இன் த ஷெல், உள்ளிட்ட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது 4 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஸ்கார் லட் ஜொஹன்சன் அளித்த பேட்டியில் ” பெண்கள் செக்ஸ் பற்றி பேச பயப்பட கூடாது. அப்படி பேசும் பெண்களை இந்த உலகம் வேறு மாதிரி பார்க்கிறது. பெண்கள் செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தாலோ அல்லது அந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டினாலோ அது தவறானது என்பார்கள். செக்ஸ் என்பது ஆண்களுக்கான விஷயமாக பார்க்கப்படுகிறது.

செக்ஸ் குறித்து ஆண்கள் பேசலாம். நண்பர்களுடன் பகிந்து கொள்ளலாம். வீடியோ பார்க்கலாம். ஆனால் பெண்கள் மட்டும் செக்ஸ் குறித்து பேச கூடாது. ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன்.என் இரண்டு வயது மகள் ரோஸ் டாரத்திற்கு நல்ல முன் உதாரணமாக இருக்க விரும்புகிறேன்.

என் மகள் எந்த விஷயமாக இருந்தாலும் என்னிடம் பேச கூடிய நிலையில் இருப்பாள் என நான் நம்புகிறேன். உரிய வயதில் நான் அவளுக்கு பாலியல் கல்வியை சொல்லி கொடுப்பேன். அப்போது தான் அவள் பாலியல் வன்முறைகளை தடுக்க முடியும். செக்ஸ் குறித்து பேச பெண்களுக்கு அனுமதிக்கபட வேண்டுமென ஸ்கார் லட் ஜொஹன்சன் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*