பூமியை நோக்கி வரும் விண்கல்: விஞ்ஞானிகள் தகவல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

asto

ஜுன் 30-ஆம் திகதி சர்வதே விண்வெளி தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் லண்டன் விஞ்ஞானிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து லண்டனிலுள்ள பெல்பாஸ்ட் பல்கலைகழகத்தின் ஆலன் பிட்ஸ்சிம்மன்ஸ் கூறுகையில், தற்போது உள்ள நிலையில் விண்கல் பூமியை தாக்குமா என்பதை விட அது எப்போது நடக்கும் என்ற கேள்வி தான் பலருக்கும் எழுந்து வருகிறது.

நிச்சயமாக விண்வெளிகல் பூமியை தாக்கும், ஆனால் அது எப்போது தாக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது.

விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பூமிக்கு அருகில் இருக்கும் விண்கற்களை கண்டறிவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அனைத்து விண்கற்களும் ஆபத்தானவை அல்ல, அதில் ஒரு சில மட்டும் தான் ஆபத்தானவை. அவைகள் பூமியை வந்து தாக்குவது ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதே சமயம் அது தொடர்பாக நாம் தெரிந்து கொண்டால் தான் நம்மால் அதை எதிர்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து லண்டன் விஞ்ஞானிகள் பூமியை நோக்கி விணகல் ஒன்று வந்து கொண்டிப்பதாகவும், அது முக்கிய நகரங்களை தாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit