
அரசியலில் எப்போதும் பரபரப்பாக இயங்கிவரும் சீமான் seeman-re-entry-cinema/, நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நடிப்பின் மீதும் தனது பார்வையை செலுத்தியுள்ளார். விஜய் ஆண்டனியை வைத்து பகலவன், ஜி.வி.பிரகாஷை வைத்து கோபம் என இரண்டு படங்களை இயக்க தயாராகி வரும் சீமான், ஒரு படத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி இயக்கியிருக்கும் ‘மிகமிக அவசரம்’ படத்தில் டிஜிபியாக சீமான் நடித்துள்ளார். விரைவில் வெளியாகப்போகும் இந்தப் படத்துக்காக சீமான் தொடர்ந்து மூன்று நாள்கள் நடித்திருக்கிறார். பெண் போலீஸை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கதை சீமானுக்குப் பிடித்துவிட்டதால், இதில் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் சீமான் அரசியல் நடவடிக்கைகளுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.