வெள்ளாவி வெச்சு வெளுத்த நடிகை எடுத்த அதிரடி முடிவு!

பிறப்பு : - இறப்பு :

நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படம் மூலம் அறிமுகமாகி ஆரம்பம், வந்தான் வென்றான், காஞ்சனா-2, வை ராஜா வை, போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்தி படங்களில அதிக கவனம் செலுத்தி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார்.

பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் மும்பையில் வீடு எடுத்து தனியாக வசித்து வருகிறார். டெல்லியில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களை வாரத்தில் ஒரு நாள் சந்தித்து வருகிறார். சமீபத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்து தனது விமானத்தை தவறவிட்டார். என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

தற்போது இவர் மும்பை வீட்டை காலி செய்து சென்னைக்கு வர உள்ளதாக தகவல் வெளியானது என்னவென்று விசாரித்தால் தமிழ் படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால், மும்பை வீட்டிற்கு சில வாரங்கள் லீவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

நல்ல படங்கள் அமைந்தால் சென்னையில் சொந்தமாக வீடு வாங்கும் எண்ணத்தில் இருப்பதாக அம்மணி சினிமா தோழிகளிடம் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit