சமூக வலைதளங்களில் பிரபலமான ஸ்டார்களின் பட்டியல்! முதலிடத்தில் இருப்பவர் ஒரு இந்தியர்!

பிறப்பு : - இறப்பு :

சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான திரையுலக நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா.

இந்தி சினிமாவில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு மிகவும் பிரபலமாகிவிட்டார். ஐஸ்வர்யா ராயை அடுத்து ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் பிரியங்கா சோப்ரா.

பே வாட்ச் படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான பிரியங்காவுக்கு மேலும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் எந்தெந்த திரையுலக பிரபலங்கள் பிரபலமாக உள்ளார்கள் என்பதை சோஷியல் மீடியா அனாலிடிக்ஸ் நிறுவனமான எம்.வி.பி. இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.

அந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் பிரியங்கா சோப்ரா. இரண்டாவது இடத்தை ஹாலிவுட் நடிகர் ராக் எனப்படும் ட்வெய்ன் ஜான்சன் பிடித்துள்ளார். ஹாலிவுட் பிரபலங்களான கெவின் ஹார்ட், கேடாட், கேரா டெலவிஞ்ச், வின் டீஸல், ஜெனிபர் லோபஸ், ஆஷ்லி பென்சன், ஜாக் எப்ரான், ஷே மிட்சல் ஆகியோர் முறையே முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit