ரஜினிக்கும், காலா படத்திற்கும் போதாத காலமாம்! சூட்டிங்கில் விபத்து! ஊழியர் உயிர் ஊசல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் காலா. இந்தப் படத்திற்கான முதற் கட்ட படப்பிடிப்பை மும்பையில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர்.

மீண்டும் மும்பையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. அதுபோல சென்னையிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதற்காக தேர்தெடுக்கப்பட்ட இடம் தான் பூந்தமல்லியை அடுத்த, பழஞ்சூர். இங்குத் திறக்கப்பட்டு, திடீரென மூடப்பட்ட தனியார் பொழுது போக்கு பூங்கா, சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் காலா படப்பிடிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூந்தமல்லியை அடுத்த மேப்பூர் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் என்கிற ராஸேஸ் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாகக் கீழே கிடந்த மின் ஒயரை மிதித்தார். அதில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜேஷ் பலத்த காயம் அடைந்தார். தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் இவர் நடிகர் ரஜினி நடித்து வரும் காலா, கரிகாலன் என்ற படத்தின் தலைப்பும், கதையும் தன்னுடையது எனச் சென்னை உதவி உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் வருவோர், போவோர் மற்றும் செல்போன்களில் பலர் காலா படத்தின் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்கு என்று கொலை மிரட்டல் விடுத்து வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பியிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த், தனது படம் ஓட வேண்டும் என்பதற்காக, படம் வரும்போது ரசிகர்களைச் சந்திப்பார். இந்த நிலையில் ரஜினியின் மகள் பொம்மையை வைத்து மிகப் பிரம்மாண்டமாக படம் எடுத்துப் பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தினார்.

அடுத்தபடம் லிங்கா, இதுவும் பிளாப் ஆகி, டப்பாவுக்குள் சென்றது. இதில் வினியோகஸ்தர்கள் ரஜினியின் சட்டையைத்தான் பிடிக்கவில்லையாம் எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த வேலையைச் செய்தார்களாம்.

இயக்குனர் சங்கர் 2.௦ வர இருக்கு. உங்க காலா படத்திற்கு அதிக புரோமோஷன் கொடுக்காதீங்க என்று காலா படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்தை கண்டித்தாராம்.

இப்படித் தொடர்ந்து நஷ்டப்பட்டு வரும் ரஜினி பணத்தை எடுத்தாக வேண்டும் என்கிற நிலைக்கு வந்துள்ளார். அதனால் தனது ரசிகர்களைத் தனது பக்கம் திருப்ப அரசியல் நாடகம் ஆடுகிறார்.

இந்த ஆண்டு மட்டும் அவரின் 2 படங்கள் வெளியாக உள்ளது. இந்தப் படங்களை ஓட வைக்கத்தான் இந்த வேலைகளைச் செய்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் காலா படம் தொடங்கியது முதல் பல தேவையில்லாத சம்பவங்கள் நடந்து ரஜினியை மூட் அவுட் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*