நியூ இயர் பார்ட்டி; நடிகைகளை தேடும் ஸ்டார் ஹோட்டல்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

புத்தாண்டை கொண்டாட திரையுலக ஸ்டார்கள் தயாராகி வருகின்றனர். ஒவ்வொரு புத்தாண்டின்போதும் அமெரிக்காவில் லாஸ் வேகாஸுக்கு சென்று தோழிகளுடன் பார்ட்டி கொண்டாடுவார் ஹன்சிகா. இந்த ஆண்டும் அந்த பயணத்துக்கு உறுதிபடுத்தி இருக்கிறார். இதற்கிடையில் தமிழ் பட படப்பிடிப்புக்காக இத்தாலி செல்கிறார். அங்கு படப்பிடிப்பு முடித்துவிட்டு இம்மாத இறுதியில் சென்னை திரும்பும் அவர் உடனே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நெருங்கிய தோழிகளுடன் லாஸ்வேகாஸ் புறப்படுகிறார்.

அதேபோல் இயக்குனர் விஜய்-அமலா பால் புதுமண தம்பதிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர். இதுபற்றி அமலாபால் குறிப்பிடும்போது,‘கேரளாவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு கணவர் விஜய்யுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்படுகிறேன். பிறகு அங்கிருந்த கனடா நாட்டுக்கு செல்கிறேன். இந்த நாளை நான் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். கடந்த முறை எனது புத்தாண்டு கொண்டாட்டத்தை ரோம் நகரில் கொண்டாடியது மறக்க முடியாத அனுபவம் என்றார்.

இப்படி சிலர் புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாட திட்டமிட, வழக்கம்போல் பாலிவுட் நடிகைகள் பலருக்கு ஸ்டார் ஓட்டலில் நடனம் ஆடுவதற்கு பெரும் தொகையுடன் அழைப்பு வந்திருக்கிறது. அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் சிலர் தயாராகி வருகிறார்கள். இதேபோல் கோலிவுட் நடிகைகளுக்கும் சென்னை மற்றும் பிற மாநில ஓட்டல்களிலும் பார்ட்டிகளிலும் டான்ஸ் ஆட பெரும்தொகை பேசப்பட்டு வருகிறது. எப்போதும்போல் சில கவர்ச்சி ஆட்ட நடிகைளுடன் லட்சுமிகரமான நாயகி, மழை நடிகை, ஆகியோருக்கும் அழைப்பு வந்துள்ளதாம். அதே சமயம் இந்த ஆண்டு சில புது வரவுகளும் களத்தில் குதித்துள்ளனர். அதில் காஜலான நடிகை, பூனமான நாயகி, சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் இளம் நடிகை ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*