சுவிசில் பொலிகை ஜெயாவின் கவிதை, சிறுகதை நூல்கள் வெளியீடு¨(Photos)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரபல இலக்கிவாதி பொலிகை ஜெயா எழுதிய எங்கே போகிறது எம் தேசம்?| கவிதை நூல், ஷபறிகொடுத்த பின்னும் வாழத் துடிப்பவர்கள்| சிறுகதை நூல் என்பவற்றின் வெளியீட்டு விழா அண்மையில் பீல் நகரில் நடைபெற்றது. ஆசிரியர் செ. மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் இலக்கியவாதி கல்லாறு சதீ~;, எழுத்தாளர் க. அருந்தவராஜா, எழுத்தாளர் கங்கை மகன், ஆசிரியர் பற்றிக், டென்மார்க் கவி இ. சக்திதாசன், ஊடகவியலாளர் சண் தவராஜா ஆகியோர் உரை நிகழ்த்தினர். சிறப்புப் பேச்சாளர்களாக உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் வெற்றிமயில்நாதன், சோசலிச ஜனநாயகக் கட்சியின் சொலிக்கோபன் கிராமசபை உறுப்பினர் மூ. தர்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூல்களை ஆசிரியை ஜோ. வனிதா, ப. பாபு, வானொலிப் பேச்சாளர் ரவி செல்லத்துரை, பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர் பொ. முருகவேள் ஆகியோர் வெளியிட்டு வைத்தனர்.

கட்டுரையாளராக எழுத்துத் துறையில் அறிமுகமான பொலிகை ஜெயா அவர்கள் 2 தசாப்தங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கும் ஒருவர் ஆவார். இவர் உள்நாட்டு ஊடகங்களிலும், ஏனைய புலம்பெயர் நாட்டு ஊடகங்களிலும், இலங்கை ஊடகங்களிலும் அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களைக் கட்டுரைகளாக வடித்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

20170505_1751572 dsc015151 img_95671

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*