ஐம்பது வருட ஊடகசேவையில் ஞா. குகநாதன் (படங்கள், காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மூத்த ஊடகவியலாளரும், யாழ் உதயன் பத்திரிகையின் முன்னைநாள் செய்தி ஆசிரியருமான ஞா. குகநாதன் அவர்கள் ஊடக வேவையில 50 வருடங்களைப் பூர்த்தி செய்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழா சுவிஸ் – சென் மாக்கிறத்தன் நகரில் நடைபெற்றது. சென் மாக்கிறத்தன் கதிர்வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா ஆலய மண்டபத்தில் தலைவர் வே. கணேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மூத்த ஊடகவிலாளர்களான இரா துரைரெத்தினம், சண் தவராஜா, விடுதலைப் புலிகள் ஏட்டின் முன்னைநாள் ஆசிரியர் ரவீந்திரன், சுவிஸ் உதயதாரகை பத்திரிகையின் முன்னைநாள் ஆசிரியரும் லொசான் மாநகரசபை உறுப்பினருமான தம்பிப்பிள்ளை நமசிவாயம், பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி. கிருபாகரன், விடுதலைப் புலிகளின் முன்னைநாள் சுவிஸ் பொறுப்பாளர் செ. குலம் ஆகியோர் உட்பட பலர் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
குகநாதன் அவர்களின் 50 வருட ஊடகப் பணியைப் பாராட்டி அவருக்கு “நவயுக நக்கீரன்” என்ற பட்டம் ஆலய பரிபாலன சபையினரால் வழங்கி வைக்கப்பட்டது.

தனது 15 வயதில் ஊடகப் பணியை ஆரம்பித்த ஞா. குகநாதன் ஈழமுரசு, உதயன் ஆகிய பத்திரிகைககளின் ஆசிரிய பீடங்களில் பணியாற்றி உள்ளார். ஈழநாடு, தினபதி, ஈழமுரசு, உதயன் ஆகிய பத்திரிகைகளில் பிராந்திய நிருபராகவும் பணியாற்றிய அவர் பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கியவர் ஆவார். போர்ச் சூழல் காரணமாக பல ஊடகவியலாளர்கள் புலம்பெயர்ந்த போதிலும் தான் பிறந்த மண்ணை விட்டு அகலுவதில்லை என்ற விடாப்பிடியான கொள்கையுடன் செயற்பட்டு வந்த அவர், பல சந்தர்ப்பங்களில் கொலை முயற்சியில் இருந்து தப்பியிருந்தார். அவர் மீதான கொலை முயற்சி யுத்தம் முடிவுற்ற காலத்திலும் தொடர்ந்ததை அடுத்து, கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுவிஸ் நாட்டிற்கு புலம் பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

kuganathan50-6 kuganathan50-5 kuganathan50-4 kuganathan50-3 kuganathan50-2 kuganathan50-1

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*