விமானத்தில் பல பேர் பார்க்க! அந்தரங்க செயலில் ஈடுபட்ட பயணி!

பிறப்பு : - இறப்பு :

விமானத்தில் பயணித்த பெண் பயணிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த சக பயணி கைது செய்யப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை ஹைதராபாத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்தில் 46 வயதுள்ள பெண் ஒருவர் பயணித்துள்ளார்.

அப்போது அதே விமானத்தில் 56 வயது கொண்ட நபர் ஒருவர், அந்த பெண் பயணி அருகே அமர்ந்துள்ளார்.

அந்த நபர் திடீரென எதிர்பார்க்காத சமயத்தில் விமானம் என்றுகூட பாராமல் சுய இன்பம் அனுபவித்துள்ளார். மேலும் அவருக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி, விமான பணிப்பெண்ணிடம் கூறியுள்ளார். பின்னர் வேறு இடத்திற்கு மாறி அமர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விமானம், டெல்லி, இந்திராகாந்தி விமான நிலையம் வந்தவுடன், பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர், உள்நாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அப்பெண்மணி.

இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து அப்பெண்மணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit