காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் சி.வி.யிடம் உருக்கம்!

பிறப்பு : - இறப்பு :

25TH_WIGNESWARAN_2384794f

காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நேற்­று­ மாலை வட­மா­காண முத­ல­மைச்­ச­ருக்கு தமது ஆத­ரவை தெரி­வித்து அவ­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­துடன் எமது உற­வு­களைத் தேடித்­தரும் பொறுப்பு உங்­க­ளு­டை­யது என மன்­றாட்­ட­மாக கோரி­யுள்­ளனர்.

வடக்­கு­மா­காண முத­ல­மைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யி­லாலத் தீர்­மானம் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யினால் வட­மா­காண ஆளு­ந­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டதை அடுத்து அதன் எதி­ரொ­லி­யாக முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வு­தெ­ரி­வித்து கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்கள் ஹர்த்தால் கடை­ய­டைப்புப் போராட்­டங்கள் நடை­பெற்­று­வரும் சூழ்­நி­லையில் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர்கள் தமக்­கான நீதியை முத­ல­மைச்சர் தான் பெற்­றுத்­த­ர­வேண்டும் என அவரை சந்­தித்து தெரி­வித்­துள்­ளார்கள்.

இச்­சந்­திப்பில் கலந்­து­கொண்ட காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் தாயொ­ருவர் தெரி­விக்­கையில்,

நாங்கள் உங்­க­ளைத்தான் நம்­பி­யி­ருக்­கிறோம். நீங்கள் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ராக தொடர்ந்தும் செயற்­ப­ட­வேண்டும். முத­ல­மைச்­ச­ராகப் பத­வி­யேற்­ற­போத அன்று உங்கள் கால்­களில் விழுந்து வணங்­கிச்­சென்றேன். காரணம் நீங்கள் தான் நீதியை வழங்­கு­வீர்கள் என்று நம்­பினோம். நீதியை ஒரு நீதி­மான்தான் பெற்­றுத்­த­ர­வேண்டும் பலரும் பல கதை­களை கருத்­துக்­களைச் சொல்­வார்கள்.

நீங்­கள்தான் நீதியைப் பெற்­றுத்­த­ர­வேண்டும். உங்­க­ளால்தான் அது முடியும். எமக்­கான நீதி கிடைக்கும் என்று நாங்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கிறோம். ஆனால் தற்­போ­தைய அர­சியல் நிலை எமக்கு ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது. அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு தெரி­விக்கும் நம்­ப­வர்கள் தேர்தல் காலத்தில் மட்டும் எம்­மிடம் வரு­கின்­றார்கள். எமக்கு நீதியைப் பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறு­கின்­றார்கள்.

ஆனால் வாக்­கு­களை பெற்­ற­வுடன் எம்மை மறந்­து­வி­டு­கி­றார்கள். பத­விக்­காக போட்டியிடுகின்றார்கள். முதலமைச்சரான நீங்கள் ஒரு நீதிமானாக தொடர்ந்தும் எமக்காக செயற்படவேண்டும். எம்மைக் கைவிடாது எமக்கான தீர்வைப் பெற்றுத்தாருங்கள் உங்களை நாங்கள் நம்பியிருக்கின்றோம். உங்களுடன் இருப்போம் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit