உறுப்பினர்கள் 38 பேரும் நிலைப்பாட்டை தெரிவித்ததும் நடவடிக்கை எடுப்பேன் : வடக்கு ஆளுநர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வட மாகாண சபையின் 38 உறுப்­பி­னர்­களும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான தமது நிலைப்­பாட்டை என்­னிடம் தெரி­வித்­ததும் நான் முத­ல­மைச்­ச­ரிடம் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கு­மாறு கோருவேன் என்று வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார்.

தற்­போது வடக்கில் என்ன நடக்­கின்­றது என்று நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அறிக்­கை­யிட்டு வரு­கின்றேன். சட்­டத்தின் பிர­காரம் செயற்­ப­டு­மாறு ஜனா­தி­பதி என்னை பணித்­துள்ளார் என்றும் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சுட்­டிக்­காட்­டினார்.

வடக்கு மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியின் தற்­போ­தைய நிலை என்­ன­வென்று வின­வி­ய­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வடக்கு மாகாண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலை தொடர்­பாக நான் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அவ்­வப்­போது அறிக்­கை­யிட்டு வரு­கின்றேன். ஜனா­தி­ப­திக்கு இது தொடர்பில் முழு­மை­யான தக­வல்­க­ளையும் வழங்­கு­வது என்­னு­டைய பொறுப்­பாகும்.

இதே­வேளை வட மாகாண சபை நெருக்­கடி விவ­கா­ரத்தில் சட்­டத்தின் பிர­காரம் செயற்­ப­டு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­னிடம் கூறினார். அந்­த­வ­கையில் நான் சட்­டத்தின் பிர­காரம் செயற்­ப­டுவேன்.

கேள்வி : பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிக்­கு­மாறு வடக்கு முத­ல­மைச்­ச­ரிடம் கேட்­டுள்­ளீர்­களா?

பதில்: இது­வரை பெரும்­பான்மை பலத்தை நிரூ­பிக்­கு­மாறு வடக்கு முத­ல­மைச்­ச­ரிடம் கோர­வில்லை. விரைவில் அந்த கோரிக்­கையை விடுப்பேன்.

கேள்வி : இதில் ஏன் தாமதம்?

பதில் : வட மாகாண சபையில் 38 உறுப்­பி­னர்கள் உள்­ளனர். வட மாகாண சபையின் 38 உறுப்­பி­னர்­களும் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்­பான தமது நிலைப்­பாட்டை என்­னிடம் தெரி­வித்­ததும் நான் முத­ல­மைச்­ச­ரிடம் பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கு­மாறு கோருவேன். இது­வரை என்­னிடம் 38 பேரும் நிலைப்­பாட்டை அறி­விக்­க­வில்லை. சில உறுப்­பி­னர்கள் வெ ளிநாட்டில் இருப்­ப­தா­கவும் சிலர் கொழும்பில் இருப்­ப­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அவர்கள் அனை­வரும் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­ததும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை சட்­டத்தின் பிர­காரம் முன்­னெ­டுப்பேன்.

கேள்வி : இது­வரை எத்­தனை உறுப்­பி­னர்கள் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­துள்­ளனர் என்று கூற முடி­யுமா?

பதில் : அதனை தற்­போது நான் கூறு­வது பொருத்­த­மா­ன­தாக அமை­யாது. அவ்­வாறு நான் கூறி­விட்டால் அது இதற்கு பின்னர் இந்த விவகாரம் தொடர்பில் தீர் மானம் எடுப்பவர்களுக்கு தாக்கம் செலுத் துவதாக அமையும். குறிப்பிட்ட சிலர் முதலமைச்சருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் தமது நிலைப்பாட்டை அறிவித் துள்ளனர். அதனை மட்டுமே என்னால் கூற முடியும் என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*