
மருத்துவமனையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ஸ்டைலாக படுத்திருக்கும் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த குழந்தை எங்கு பிறந்தது என்ற தகவல்கள் தெரியவில்லை.
அதே நேரத்தில் பெரிய மனிதர்கள் போல மிக ஸ்டைலாக தலைக்கும் பின்புறம் இரு கைகளையும் மடக்கி வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட அழாமல் கெத்தாக படுத்துக்கொண்டிருக்கிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர் குழந்தை தனது எதிர்காலத்தை பற்றி தற்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டது என கமெண்ட் அடித்துள்ளனர்.