பிக்குவின் வெறிச்செயல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தம்புள்ளை தேசிய பாடசாலையின் 10 தரத்தில் கல்வி கற்கும் 34 மாணவ மாணவியர்களிற்கு தடியினால் தாக்கிய மதகுரு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, தாக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பாடசாலையின் சிங்களம் மற்றும் பௌத்த பாட விதானத்திற்கு பொறுப்பான மதகுரு, நேற்று மாலை மாணவர்களுக்கு நடத்திய மேலதிக வகுப்பின் போதே இவ்வாறு தாக்கியுள்ளார் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 18 மாணவிகளும் அடங்குகின்றனர்.

கடும் தாக்குதலுக்கு இலக்கானதால் பல மாணவர்கள் தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக அவர்கள் இன்று பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

மேலதிக வகுப்புக்காக அப்பியாச கொப்பிகளை கொண்டுவராததால் இவ்வாறு தாக்கப்பட்டதாக, தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாக இது தொடர்பில் காவல்துறையில் முறையிட வில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் எமது செய்தி சேவை தேசிய பாடசாலைகளின் பணிப்பாளர் ஜனந்த விக்ரமநாயக்கவிடம் வினவியதற்கு, சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*