பாம்பை காப்பாற்ற மனிதர் செய்த வினோதம்!

பிறப்பு : - இறப்பு :

ஆஸ்திரேலியாவில் உள்ள டம்பியர் போர்ட் என்ற இடத்தில் மேத்யூ என்பவர் தன் நண்பர் ட்ரேசி என்பவருடன் சாலையில் பயணம் செய்துள்ளார்.

அப்போது சாலையின் குறுக்கே இரண்டரை மீட்டர் நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

போக்குவரத்து மிகுந்த சாலையில் பாம்பின் மீது வாகனங்கள் ஏறி அதற்கு ஏதாவது நேரிடலாம் என்று நினைத்த மேத்யூ, வாகனத்தை விட்டு கீழே இறங்கி பாம்புக்கு அரணாக சாலையில் படுத்துள்ளார்.

அந்த மலைப்பாம்பு சாலையை கடக்க ஏறத்தாழ 5 நிமிடங்கள் ஆகியுள்ளது. அதுவரை, பாம்புக்கு அருகில் சாலையில் படுத்திருந்த மேத்யூ, பாம்பு பத்திரமாக கடக்கும்வரை அதற்கு அரணாக இருந்துள்ளார்.

இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்த அவரின் நண்பர் ட்ரேசி, சமூகவலைதளத்தில் அதில் பதிவேற்றம் செய்து உயிரினங்கள் பாதுகாக்கப்படுவதற்கான முக்கியத்துவத்தையும் விளக்கியுள்ளார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரையும் நெகிழவைத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit