அத்தான் மீது ஆசைப்பட்ட மைத்துனி! அக்காவோ வேற ஒருவருடன்..! 62 வயது தாத்தா செய்த காரியம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மகராஷ்டிரா மாநிலம், தானேவை சேர்ந்தவர் சதீஷ்ஆப்தே(62). இவர் மும்பையை சேர்ந்த லிசா என்பவரை கடந்த 2015ல் திருமணம் செய்தார். அப்போது இவர்கள் எடுத்து கொண்ட செல்ஃபி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் செல்ஃபி ஜோடி என்றே அழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் என் மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் என் மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு காரணம் எனது மைத்துனி மோனிகா தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் என் மைத்துனி மோனிகாவிற்கு என் மீது ஆசை இருந்தது. அவரும் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருந்த நகைகளையும் மோனிகா எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே லிசாவின் பெற்றோர் தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது. அதில், சதீஷ் பாலியல் ரீதியாக தங்களது மகள் லிசாவை தொந்தரவு செய்துள்ளார். அதோடு லிசாவை மிரட்டி திருமணம் செய்து கொண்டார் என்று புகார் கூறியிருந்தனர்.

இந்நிலையில் சதீஷ் மீண்டும், லிசா பெற்றோர் மீது புகார் கொடுத்துள்ளார். லிசாவுக்கு என் மீது காதல் அதிகம். ஆனால், அவரது குடும்பத்திற்கு எங்கள் காதலில் விருப்பமில்லை.

அதனால், அவரை குஜராத்தில் உள்ள ஒருவருக்கு ரகசியமாக திருமணம் செய்து கொடுத்துள்ளனர். லிசா இன்னும் என்னுடைய மனைவி தான். நாங்கள் விவாகரத்து பெறவில்லை. அவரை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*