மருத்துவ நோயறிதலிற்கு அறைகூவல்‘C’ வடிவில் பிறந்த குழந்தை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எட்மன்டனில் பின் நோக்கி மேலே வளைந்த நிலையில் றோசி ஹிப்கின் என்ற குழந்தை பிறந்தான்.
கடுமையான மூட்டு மடக்கத்துடன் பிறந்த றோசி-மிக அரிதான நரம்பு தசை கோளாறான- இந்நிலை காரணமாக மூட்டுக்கள் மற்றும் தசைகளின் இயக்கம் தடைப்படலாம்.

இவனது கடுமையான வளைந்த முதுகெலும்பு காரணமாக இவன் உயிர்பிழைக்க முடியாத நிலை ஏற்படலாம் என இவனது தாய் கர்ப்பமாக இருக்கும் போது தெரிவிக்கப்பட்டது.

எதிர் மாறாக றோசி பிறந்து ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் இவன் சுறு சுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது மட்டுமன்றி தனது தாயையும் பிசியாக வைத்திருக்கின்றான்.

கர்ப்ப காலத்தில் கடுமையாக வளைந்த நிலையில் இருந்ததால் வைத்தியர்கள் இவனிற்கு“C Man” செல்லப்பெயரிட்டனர்.

இவன் 20-வாரங்களில் இருக்கையில் இவனது முதுகெலும்பு வளைந்த நிலையில் இருப்பதை வைத்தியர்கள் கவனித்தனர். அந்த நேரத்தில் இது 90-டிகிரியை கடந்து நீட்டிக்கப்பட்டிருந்தது.

பிறக்கும் போதும் றோசி அந்த உருவத்தில் தான் பிறந்தான். வயர்கள் பொருத்திய நிலையில் கண்ணாடி பெட்டிக்குள் குழந்தையை பார்ப்பது மிக கடினமானதென அழுகையுடன் தெரிவித்தார் தாயார்.

ஒரு முறை புத்துயிர் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அதன் பின்னர் மற்றய குழந்தைகளைப் போன்று திறனுடையவனாக காணப்பட்டான் என தாய் தெரிவித்தார்.

தவழும் போது தனது கைகளை உபயோகிக்க மாட்டான். கால்களால் தனது தலையை சொறிவான்.சக்கர நாற்காலியை தனது கால்களால் ஓட்டுவான். தசை இறுக்கம் குறைவான காரணத்தினால் அவனது கைகளை உபயோகிப்பது அவனிற்கு கடினமாக இருக்கின்றது.

றோசியால் தானாக மூச்சு விடவோ அல்லது தட்டையாக கிடக்கவோ முடியாதெனவும் நீண்ட காலம் உயிர் வாழ மாட்டான் எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். இத்தகைய நோய் கண்ட பிள்ளைகளில் மூன்றிற்கு ஒருவர் தான் தங்களது முதலாவது பிறந்த நாள் வரை உயிருடன் இருப்பார்கள் எனவும் தெரிவித்தனர்.

றோசியை வளர்ப்பது இலகுவானதல்ல ஆனால் அவனது மகிழ்சியான செயற்பாடுகள் சமாளிக்க கூடியவை எனவும் தாயாரான ஹெப்னெர் கூறினார்.

என்ன நடந்தாலும் தனது மகன் குறித்த எதனையும் தன்னை மாற்றாதென தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*