நான் கவர்ச்சி நடிகைதான்..! கோடி, கோடியாகக் கொடுத்தாலும் அதுக்கு இடம் தரமாட்டேன்!

பிறப்பு : - இறப்பு :

பாலிவுட் திரையில் தனது கவர்ச்சியால் அனைவரையும் கட்டிப் போட்டு இருப்பவர் நடிகை ஊர்வசி ராதேலா. இவர் மிஸ்டர் அயராவாதா என்கிற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.

அதன் மூலம் கர்நாடகாவின் கவர்ச்சி கன்னியாகவும் வலம் வருகிறார். பாலிவுட்டில் அனைவரின் தூக்கத்தை கெடுக்கும் இவர், சமீபத்தில் பாலிவுட்டின் ஹிட் சீரியஸ் ஹேட் ஸ்டோரி 4ம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இவர் இந்தப் படத்தில் கவர்ச்சியாக நடிக்க மட்டுமே ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டதாம். ஆனால் என்ன நினைத்தாரே என்னவோ திடீரென்று அந்த நடிகை படத்தில் இருந்து விலகிவிட்டார்.

நான் கவர்ச்சி நடிகைதான் அதற்காக இப்படியெல்லாம் என்னால் நடிக்க முடியாது என்று புலம்பி தள்ளிவிட்டாராம். இருந்தபோதிலும் அந்தப் படத்திற்கு ஊர்வசி தான் வேண்டும் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஒற்றைக்காலில் நிற்கின்றனர்.

அப்படி என்னதான் அவரிடம் உள்ளது என்று மற்ற நடிகைகள் புலம்பல் சத்தம் அதிகமாக பாலிவுட்டில் கேட்பதாக பாலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit