பஞ்சாயத்து முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

என்ன சொல்றதுன்னே தெரியலை.. ஆனா என்னென்னவோ நடக்குது லோகத்துல..!அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போது ஊரே திரண்டு விழா எடுத்தது.

சொந்த பந்தம் திரண்டு எருமைக் கடா விருந்து ஏற்பாடு ..சுடச் சுட சாராயம் காய்ச்சி, இரவு முழுக்க அந்தப் பெண்ணின் கையால் பரிமாற வைத்து குடித்து உருண்டார்கள்.

அடுத்த நாள் காலை போதையில் கிடந்த ஒரு பையனை எழுப்பி.. அனைவரும் சேர்ந்து மாலை போட்டு அந்தப் பெண்ணுக்கு நீதான் பொருத்தமானவன் என்றார்கள்.

காரணம் இரண்டு பானை சாராயத்தை ஒரே ஆளாகக் குடித்த பலசாலி. பரிமாறிய பெண் “இவன் தான் பலசாலி இவன் தான் எனக்கு கணவன்” என்று கூறி தேர்ந்தெடுத்து விட்டாள்.

அடுத்த வாரமே கல்யாணம் என்று கூறி முடிவெடுத்தார்கள். அந்த ஒரு வாரம் முழுக்க மணமகன் கிராமத்தில் இருக்க கூடாது.

சகோதரர்கள், நண்பர்களுடன் காட்டிற்கு வேட்டையாட செல்ல வேண்டும். ஆமாம் திருமணத்திற்கு வேண்டிய கடா விருந்துக்கு காட்டெருமைகளை அவன் தான் வேட்டையாட வேண்டும்.

ஊருக்கே விருந்து, எப்படியும் முப்பது, நாற்பது கடா வேண்டும். சாராயமும் காய்ச்ச வேண்டும். காலையில் விருந்து, அப்புறம் கல்யாணம்.

அன்று இரவுதான் சூப்பர் கிளைமாக்ஸ்.

ஊரே மைதானம் என்று கூறப்படும் ஊருக்கு நடுவே உள்ள பஞ்சாயத்து திடலில் கூடி உட்கார்ந்து விடும்.

ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், என ஜே ஜேவென கூட்டம் கூடி இருக்க நடுவே அலங்கரிக்கப்பட்ட கட்டில் மெத்தை, பால் பழம் இருக்கும். மணமகன், மணமகள், அங்கு அழைத்து வரப்படுவார்கள்.

அவர்கள் முன்னிலையில் சாந்தி முகூர்த்தம் நடக்கும். பெரியவர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.

எல்லாம் முடிந்து இருவரையும் ஒன்று சேர மஞ்சள், வேப்பிலை, துளசி கலந்த நீரால் குளிப்பாட்டுவார்கள்.

அப்படிக் குளிக்க வைத்தால் பெரியவர்களுக்கு இருவரும் சரியான ஜோடிகள் என்று அர்த்தம்.

பெண்ணை மட்டும் குளிக்க வைத்தால் அடுத்த நாள் நாள் காலை மீண்டும் எருமைக் கடா விருந்து வைத்து..தாலியை கழட்டிவிட்டு மணமகனை ‘ நீ அதுக்கு சரி வர மாட்டே’ என்று கூறி ஊரை விட்டு விலக்கி வைத்து விடுவார்கள்.

அதன் பிறகு மணமகன் அந்த ஊருக்குள் எட்டிப் பார்க்கக் கூடாது. பெண்ணுக்கு வேறு மாப்பிள்ளை பார்ப்பார்கள்.

இது என்ன கொடுமை இது எங்கே நடக்கிறது என்று தானே கேட்கிறீர்கள். நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு இனத்தில் இன்றளவும் இந்த விநோதப் பழக்கம் இருப்பதாக கூறுகிறார்கள்.

என்னத்தை சொல்றது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*