கர்பவதிகள் கவனிக்க வேண்டியவை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கர்ப்பவதிகள் பாலில் குங்குமப்பூ கலந்து அருந்தினால் சிவப்பான குழந்தை பிறக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. உண!மையில் அப்படியா? என்றால் இல்லை. குங்குமப்பூவிற்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாலின் சுவை மாறுவதற்கும், வாசனைக்காகவும் மட்டுமே குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது. குழந்தைகள் கறுப் பாகவோ, சிவப்பாகவோ பிறப்பதற்கு தாய் தந்தையரின் மரபணுக்கள்தான் முக்கிய காரணம். சரி கர்ப்பமான பெண!கள் கர்ப்பமான காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் காணலாம்.

* கர்ப்பவதிகள் உணவு உண்ணும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பமான காலத்தில் கால்சியமும் இரும்புச்சத்தும் அதிக அளவில் உடலக்கு தேவைப்படுகிறது. சாப்பாட்டில் தினமும் ஒரு கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் அது மலச்சிக்கலை தவிர்க்கும். அசைவ உணவு உட்கொள்பவர்கள் முட்டை மற்றும் கடல் சார்ந்த உணவான மீனை உட்கொள்ளலாம். இரவு உணவு கால தாமதமின்றி சீக்கிரம் உட்கொள்ளவும். உணவு உட்கொண்டபின் உடனடியாக படுக்கைக்கு செல்வதை தவிர்க்கவும். ஏனெனில், சாப்பாடு ஜீரணமாகும்போது உருவாகும் வாயு நெஞ்சை வந்து அடைப்பது அவஸ்தையாக இருக்கும். பழ வகைகள் மற்றும் பழரசங்கள் கர்ப்பவதிகளின் உணவில் கண்டிப்பாக இடம் பெற வேண!டும்.

* கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ, பஸ் ஆகியவற்றில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேடு பள்ளமாகவும், கடினமாகவும் உள்ள இடங்களில் இருத்தலும், படுத்தலும் கூடாது.

* கர்ப்பிணிப் பெண்கள் மல்லாக்க படுக்கக் கூடாது. அப்படிப் படுத்தால் வயிற்றிலிருக்கும் குழந்தையை தொப்புள் கொடி சுற்றிக் கொள்ளும் என்று சொல்வார்கள். இதில் மல்லாக்க படுக்கக் கூடாது என்பது மட்டும் உண!மை. அப்படி மல்லாந்த நிலையில் படுக்கும்போது கனமாக இருக்கும் கருப்பை இதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களை அழுத்த ஆரம்பிக்கும். இதயத்துக்குத் தேவையான இரத்தம் போய் சேராமல் இரத்த அழுத்தம் (டீ.P.) இறங்கும். இதனால் தலைசுற்றி மயக்கம் வரும். இதனைத் தவிர்க்க இடது பக்கம் ஒருக்களித்து படுக்க வேண!டும். இப்படி படுப்பதால் தாய்க்கும், சேய்க்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

* கர்ப்பமாக இருக்கிறோம் என்று நீர் பரிசோதனையில் தெரிந்த பின் மருத்துவரிடம் செய்து கொள்ள வேண்டிய பரிசோதனைகள். இரத்த அழுத்தம், உடல் எடை, சிறுநீரில் சர்க்கரை மற்றும் புரோட்டீன் அளவு, இரத்தப் பிரிவு, சுர் பரிசோதனை, இரத்தத்தில் சர்க்கரை மற்றும் இரத்த சோகை இருக்கிறதா? என்று தெரிந்து கொள்ள ஹீமோகுளோபின் பரிசோதனை, பால்வினை நோய்களை கண்டறியும் பரிசோதனை. இதில் இரத்த அழுத்தம், உடல் எடை மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகிய மூன்று பரிசோதனைகளும் மருத்துவரிடம் ஒவ்வொரு முறை மருத்துவ பரிசோதனைக்கு செல்லும்போதும் செய்ய வேண்டியவையாகும். உடல் எடை மிகவும் அதிகரிக்காமல் அந்தந்த மாதத்திற்கு ஏற்றபடி சீராக அதிகரிக்கிறா என்பதை அறிய இந்த பரிசோதனைகள் உதவும்.

* முதல் முறையாக மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனைக்கு வரும்போது கர்ப்பவதிகள் ஸ்கேன் செய்ய வேண!டும். இது கரு சரியான முறையில் கருப்பையில்தான் உருவாகி உள்ளதா என்பதை அறிய உதவுகிறது. இரண!டாவது ஸ்கேன் ஐந்தாவது மாதத்தில் கருவிலிருக்கும் குழந்தையின் கை, கால், முதுகுத் தண்டு, இதயம் போன்றவற்றின் வளர்ச்சியை பார்க்க உதவும். இந்த உறுப்பு களில் ஏதேனும் ஊனம் இருப்பின் குறையுள்ள கரு என்று அகற்றிவிடலாம். சரிப்படுத்த முடியாத ஊனம் என்றால் மட்டுமே இதைப் போன்ற கருக் கலைப்பு தேவைப்படும். மூன்றாவது ஸ்கேன் பிரசவம் நெருங்கும் ஒன்பதாவது மாதத்தில் எடுக்கப்பட வேண்டும். பிரசவத்துக்குத் தோதாக குழந்தையின் தலை கீழ்ப்புறமாகத் திரும்பி இருக்கிறதா, அதனுடைய நிலைப்பாடு என்ன என்று பார்த்து அதற்கேற்ப பிரசவத்தை வைத்துக் கொள்ள இது உதவுகிறது.

கர்ப்பவதிகள் டி.டி. (வு.வு.) எனப்படும் „டெட்டனஸ் டாக்ஸாய்டு… தடுப்பூசியை ஆறாவது மாதத்தில் ஆரம்பித்து ஏழாவது மாதத்தில் ஒரு முறை, எட்டாவது மாதத்தில் ஒரு முறை என மொத்தம் மூன்று முறை போட்டுக் கொள்ள வேண!டும். தற்போது இந்த ஊசியை இரண!டு முறை போட்டுக் கொண்டால் போதும் என்று கூறுகின்றனர். பிரசவ நேரத்தில் குழந்தை பிறக்க இடம் போதாமல் வஜினாவின் குறுகிய வாய்ப்பகுதியை லேசாக கிழித்து விட்டு குழந்தையை எடுப்பதுண்டு. மற்றும் சிலருக்கு சிசேரியன் செய்வதுண்டு. இந்த நேரங்களில் ஏற்படும் புண்களில் டெட்டனஸ் கிருமிகள் சேர்ந்து நோய் தொற்று ஏற்படுத்தி விடாமல் தடுக்கும் ஊசிதான் இந்த டெட்டனஸ் தடுப்பூசி.

கர்ப்பவதிகள் தன்னையும் சேர்த்து மற்றொரு உயிரையும் தாங்கி இருப்பதால் மிக கவனத்துடன் பிரசவத்தை அணுக வேண்டும். மேற்கூறிய சில ஆலோசனைகளை தவறாமல் கடைபிடிப்பது நல்லது. தகுந்த நேரத்தில் மகப்பேறு மருத்துவரை அணுகியும் ஆலோசனை பெறவேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*