புலியுடன் உறங்கி பாம்பினால் உயிர்விட்ட உலகப் பேரழகியின் அறியப்படாத இரகசியங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகத்திலே அழகான பிணம் இங்கே உறங்குகிறது. நல்லவேளை அவள் பிணமாகிவிட்டாள். இல்லையென்றால் ரோமாபுரி இராஜ்ஜியமே இந்த கல்லறையில் உறங்கியிருக்கும்”

உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் அழகிய கல்லறையின் வாசகம் இது. வரலாற்றில் இன்றுவரை உலகப் பேரழகி யார் என்று கேட்கும் போது சட்டென இவள் பெயரை உச்சரிக்கச் செய்து விட்டு மரணித்தவள் கிளியோபாட்ரா.

கிளியோபாட்ரா, அவள் கண்களால் பலரையும் வசியம் செய்து விடும் மாய அழகு கொண்டவள், பாலில் அன்றாடம் குளிப்பவள், புலியுடன் உறங்குபவள் எனப் பல்வேறு வகையாக வர்ணிக்கப்பட்டாள்.

அதே அளவு தூற்றவும் பட்டவளே இவள். காரணம், அதிகார பேராசை. ஆனால் அவளை தூற்றும் உலகத்தில் அவள் பற்றிய மர்மங்களும் கூட இன்றும் தொடர்கின்றன.

கிரேக்க வரலாற்று ஆசிரியர் மார்க் ஆண்டனி (Mark Antony) கிளியோபாட்ராவை எகிப்தியர்கள் கடவுளாக பார்த்தனர் எனவும், அவள் சிறந்த அரசியல் நுட்பம் உடையவள், உளவாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிரேக்க பேரரசர் அலெக்சாண்டரின் தளபதிகள் வம்சமான தாலமி வம்சத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் கிரேக்க இனத்தவளாகவே தன்னை பாவனை செய்து கொண்டாள் கிளியோபாட்ரா.

தனது 18ஆம் வயதில் தந்தையின் மரணத்தின் பின்னர் அரசு பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். எகிப்திய சட்டத்தின் படி ராணி மட்டும் தனித்து நாட்டை ஆளமுடியாது. அதனால், தாலுமி எனப்பட்ட அவளின் சகோதரனையே மணந்ததாகவும் கூறப்படுகின்றது.

அப்போதைய காலகட்டத்தில் எகிப்தில் செல்வம் இருந்த அளவு, பாதுகாப்பும், படை பலமும் இல்லை அதனால், எகிப்தின் பாதுகாப்பிற்காக ரோம் பேரரசர் ஜீலியட்சீசரை தனது 21ஆவது வயதில் மணந்தாள்.

அப்போது சீசருக்கு 54 வயது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். அந்த காலகட்டத்திலேயே கிளியோபாட்ராவின் முன்னாள் கணவன் தாலுமி மர்மமான முறையில் மரணமடைந்தான்.

அந்த கொலைப்பழியும் கிளியோபாட்ரா மீது விழுந்தது. இது அவள் மரணத்தை தேடிக்கொள்ள விழுந்த முதல் அடி அது. அதனை அடுத்து கிளியோபாட்ரா சீசருடன் ரோம் வந்து சேர்ந்தாள்.

அவள் வந்த நேரமோ தெரியவில்லை ரோமில் ஏற்பட்ட அதிகாரப்போட்டியில் சீசர் கொல்லப்பட, அங்கிருப்பது ஆபத்து என மீண்டும் எகிப்திற்கே தப்பி ஓடினாள்.

அதன் பின் ரோமில் ஆட்சியை பிடித்த தளபதி மார்க் ஆண்டனியை காதல் செய்து மணந்து கொண்டாள். அவர்களுக்கு 3 குழந்தைகளும் பிறந்து விட்டனர்.

ஆனாலும் கிளியோபாட்ரா தனது ஆட்சி அதிகாரத்திற்கு எந்தவித போட்டியும் வந்து விடக்கூடாது என்பதற்காக, தனது சகோதரர்களையும், சகோதரிகளையும் கூட கொன்றுவிட்டாள்.

இப்படியான நிலை தொடர சீசரின் வாரிசுகள் எகிப்திற்கு ஆபத்தாக மாறி கிளியோபாட்ராவை சிறைபிடித்தனர். போரில் தோற்ற விரக்தி, காதல் மனைவியின் பிரிவைத் தாங்கிக் கொள்ளாத மார்க் ஆண்டனி தற்கொலை செய்து கொண்டான்.

கடைசியாக தனது 39ஆவது வயதில் கிளியோபாட்ரா சிறையில் இருக்க பிடிக்காமல், பாலைவன விஷப்பாம்பு ஒன்றைத் தீண்டச் செய்து கொண்டு இறந்து போனாள்.

தன்னாலேயே மார்க் மரணித்தான் என்ற அந்த விரக்தியும், தன் தவறையும் உணர்ந்ததாலேயே கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொண்டாள் எனவும் ஒரு கதை உண்டு.

எவ்வாறாயினும் கிளியோபாட்ராவின் வரலாறு அரசியலில் எதுவும் நிலையில்லை, என்பதை எடுத்துக் காட்டுவதோடு, அதிகாரம் என்றுமே நிலைக்காது என்பதையும் எடுத்துக் காட்டிவிட்டது.

கிளியோபாட்ராவின் வாழ்க்கையில் இன்றுவரை அவள் நல்லவளா? அல்லது கெட்டவளா? என்ற இருவகை சந்தேகங்களும் காணப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*