இலங்கைக்கு பெருமை சேர்த்த பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா?

பிறப்பு : - இறப்பு :

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இலங்கை வீராங்கனை பொருளாதார நெருக்கடி காரணமாக அதை ஏலம் விடுவதற்கு முடிவு செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கடந்த 2000-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் 200-மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையைச் சேர்ந்த சுசந்திக்கா ஜயசிங்க கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்று, இலங்கைக்கு பெருமை சேர்த்தார்.

இந்நிலையில் இவர் தற்போது மிகவும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடுவதற்கு முடிவு எடுத்துள்ளார்.

தனக்கு விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் பதவி ஒன்று வழங்கப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், இதுவரை எந்த ஒரு பொறுப்பும் வழங்கப்படவில்லை.

தனக்கு அந்த பதவிக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான நான் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளதால், நாட்டுக்கு புகழை தேடித்தந்த ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit