நான் 28 வயதில் தான் முதலில்.. ஆனால், இப்போதோ 15 வயதிலேயே! ஆபாச படங்களை இயக்க வேண்டும்!

பிறப்பு : - இறப்பு :

சர்ச்சைக்கு பெயர்ப்போன இயக்குனர் வேலுபிரபாகரன் தனது பட நடிகை ஷெர்லியை திருமணம் செய்த நிலையில், அவர் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பரபரப்பான பேட்டி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த பேட்டியில் இன்றைய காலக்கட்டத்தில் ஆபாசம் அனைவரின் கையிலும் உள்ளது , ஆபாச படங்களையும் நாம் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நான் ஒரு படம் இயக்க போகிறேன் என்றதும் என் பெயரை கேட்டதும் எந்த நடிகையும் நடிக்க முன்வரவில்லை. காரணம் மீடியாக்கள் என்னை பற்றிய தவறான செய்தியை வெளியிடுவது தான். இயக்குநர் வேலுபிரபாகரன் என்றாலே செக்ஸ் படம் எடுப்பவர், நடிகைகளை ஆபாசமாக காட்டுபவர் என்ற ஒரு மாயையை மீடியா உருவாக்கிவிட்டது. ஆபாச நடிகை சன்னிலியோனுக்கு கொடுக்கும் மரியாதையை கூட மீடியாக்கள் எனக்கு கொடுக்கவில்லை.

இன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் குற்றங்களில் 80% பாலியல் குற்றங்கள் தான். முன்பெல்லாம் ஆபாச புகைப்படம் பார்ப்பது பெரிய விஷயம். ஆனால் இன்று அப்படியில்லை அனைவரின் கையிலும் ஆபாச படங்கள் உள்ளது . நான் 28 வயதில் தான் ஒரு பெண்ணை முழுதாக பார்த்தேன். ஆனால் இன்றைய இளைஞர்கள் 15 வயதிலேயே அனைத்தையும் அனுபவித்து விடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit