அன்று ஒரு இரவு ஒரே இரவு.. அந்த இரவில் வீழ்ந்த நடிகை! வீழ்த்திய ஹீரோ : என்ன நடந்தது?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெரிய இயக்குனரின் படம் அது. அட்டகாசமாக, அமர்க்களமாக அந்தப் படம் துவங்கியது. முதன் முதலில் ஹெட் நடிகருடன் ஜோடி சேர்கிறார் அந்த இனிய ஹீரோயின்.

அதற்கு முன்பே தளபதி நடிகருடன் ஜோடி சேர்ந்த நடிகைக்கு இந்த ஹெட் நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை.

அந்த ஆசை இந்த படத்தில் நிறைவேறியது. ஒரு பாடல் காட்சி அந்த வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையில் நடந்தது.

அன்று இரவு ரம்மியமான நிலவொளியில் ஷூட்டிங். மரங்கள்,பாறைகள் நிறைந்த இடம் அது. ஒரு நடிகை சம்பந்தப்பட்ட காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஹீரோ சற்று தள்ளி அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு லைட்மேன் கொஞ்சம் ஒதுங்கிப் போய் ஒரு சிகெரெட் பற்றவைக்கிறார்.

அவ்வளவுதான் அந்தப் புகை மேலே சென்ற சில நொடிகளில் ஆயிரக்கணக்கில் தேனீக்கள் கலைந்து படையெடுத்தது. அனைவரும் ஓடுகிறார்கள்.

நடிகையை தேனீக்கள் சூழ்ந்து கொள்கிறது. அந்த இரவில் அலறுகிறார் ஹீரோயின். ஹீரோ அதிர்ச்சி அடைகிறார்.

லைட்டிங் கருப்பு கிளாத் ஒன்றை எடுத்துக் கொண்டு ஹீரோயின் இருக்கும் இடத்திற்கு ஓடுகிறார் ஹீரோ. எங்கும் தேனீக்கள். அத்தனையும் மலைத் தேனீ.

ஹீரோ ஹீரோயின் மீது விழுந்து உருண்டு புரண்டு கருப்புத் துணியால் போர்த்திக் கொண்டு தான் அவர் பாதுகாக்க தேனீக்கள் ஹீரோவைப் பதம் பார்க்கிறது.

இதற்குள் ஒரு தீ பந்தத்துடன், ஒரு ஆர்ட் அசிஸ்டென்ட் ஓடிவந்தார் பந்தத்தை அங்குமிங்கும் வீச பதினைந்து நிமிடங்களில் தேனீக்கள் கலைகிறது.

அனைவரும் ஓடிவந்து ஹீரோவைத் தூக்குகிறார்கள். உடம்பெங்கும் வீக்கம். ஆனால் ஹீரோயினுக்கு ஓரளவு தான் பாதிப்பு. மருத்துவ மனைக்கு ஓடுகிறார்கள்.

அவசர சிகிச்சைப் பிரிவில் ஹீரோவை சேர்த்து விஷ முறிவு கொடுக்கிறார்கள். அவர் அருகில் இருந்து அழுது கொண்டிருக்கிறார் அந்த இனிய ஹீரோயின்.

அவரை சமாதனம் செய்ய முடியவில்லை. அடுத்த நாள் காலை கண் விழிக்கிறார் ஹீரோ. அருகே பூ மாதிரி இனியவர் அமர்ந்திருக்கிறார்.

அந்த ஒரு இரவில் அந்த ஒரே இரவில் அந்த இனிய ஹீரோயினுக்கு அந்த ஹீரோ மீது காதல் அரும்பியது. இவரே நமக்கு பாதுகாப்பு என்று முடிவிற்கு வருகிறார்.

அந்தப் படம் முடியும் போது இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கின்றனர்..!

இதோ இப்போது வரை அவர்கள் தலை சிறந்த தம்பதிகள்..!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*