எனக்கு ஜோடியா ஹன்சிகா வேணாம். நயன்தாரா இருக்கட்டும்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சிவகார்த்தியேன் என்னதான் கலெக்ஷன் ஹீரோவாக இருந்தாலும், அவருடன் ஜோடி சேர்ந்த அழகிகள் யாரும், பிலிம்பேர் அழகிகளுக்கு சற்று கீழேதான் இருந்தார்கள். அந்த நேரத்தில்தான் தன் இன்முகச் சிரிப்பை, பன்முக திறமை கொண்ட சிவகார்த்திகேயனுக்காக தாரை வார்க்க முன் வந்தார் ஹன்சிகா.

அந்த, படத்திற்கு பிறகு ஹன்சிகாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் தொட்டு தொடராத ஒரு பட்டு பந்தம் உருவானது. சிவாவின் வெல் விஷர்களில் ஒருவர் ஆனார் ஹன்சிகா. இந்த நட்பை முறிக்க என்னதான் சிம்பு கொம்பு சீவினாலும், ஒன்றும் நடக்கவில்லை. இந்த நேரத்தில்தான் தனது நண்பனுக்காக ஒரு காரியம் செய்தார் ஹன்சிகா.

‘ஆம்பள’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, சுந்தர்சியிடம் பேசி ‘சிவகார்த்திகேயனை வச்சு ஒரு படம் பண்ணுங்க’ என்று கேட்டுக் கொண்டார். ஹன்சிகாவே சொல்லியாச். அப்புறமென்ன? விறுவிறுவென களத்தில் இறங்கிய சுந்தர்சி, சிவாவை சந்தித்து கதை பேச, புராஜக்ட் ஐம்பது சதவீதத்தை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் சிவா ஒரு கண்டிஷன் வைத்தாராம்.

‘எனக்கு ஜோடியா ஹன்சிகா வேணாம். நயன்தாரா இருக்கட்டும்’ என்று. அவர் பிரச்சனை அவருக்கு. தனது தொழில் எதிரி விஜய் சேதுபதி நயன்தாராவுடன் நடித்து வரும்போது ‘நான் மட்டும் மிஸ் பண்ணினால் எப்படி?’ என்கிறாராம். இந்த தகவலை கேட்ட ஹன்சிகா அப்செட்!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit