ஐ.எஸ்-யிடம் செக்ஸ் அடிமையாக சிக்கி தப்பிய பெண்: இனமக்கள் முன் கதறிய பரிதாபம்

பிறப்பு : - இறப்பு :

ஐ.எஸ் தீவிரவாதிகள் பிடியில் செக்ஸ் அடிமையாக சிக்கி தப்பித்த ஈராக்கை சேர்ந்த யாசிடி பெண் நாடியா முராட், தான் கடத்தப்பட்ட இடத்தில் கண்ணீர் விட்டு கதறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

21 வயதான நாடியா முராட் கடந்த 2014ம் ஆண்டு யாசிடி கிராமத்தில் உள்ள பள்ளியில் வைத்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

2014ம் ஆண்டு ஐ.எஸ் பிடியில் இருந்த தப்பிய நாடியா முராட், 2015 ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தன் கதையை கூறி கதறி, ஐ.எஸ் பிடியில் உள்ள யாசிடி பெண்களை மீட்க கோரிக்கை விடுத்தது உலகையே உலுக்கியது.

இதனையடுத்து நாடியா முராட், யாசிடி அகதி மற்றும் பெண்கள் உரிமைகள் ஆகியோருக்கு வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார்.

ஈராக்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த யாசிடி கிராமத்தை ஈராக் படையினர் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடு திரும்பிய நாடியா முராட், தான் கடத்தப்பட்ட பள்ளி வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

பின்னர் கண்ணீருடன் பேசிய நாடியா, எங்கள் தலைவிதி ஆண்கள் போல் கொல்லப்படுவோம் என நாங்கள் நம்பினோம்.

ஆனால், அதற்கு பதிலாக சிரியர்கள், ஈராக்கியர்கள், துனிசியர்கள் மற்றும் ஐரோப்பியர்களுக்கு விற்கப்பட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டோம் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit