பாரீஸ் ஒப்பந்தம்: டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி! வெளுத்து வாங்கிய அர்னால்டு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பருவநிலை மாற்றத்தின் பேரழிவுத் தாக்கங்களிலிருந்து பூமியை பாதுகாக்க விரும்பும் 2015ம் ஆண்டின் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், அமெரிக்கா பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து விலகியதை விமர்சனம் செய்துள்ளார்.

“தனி ஒரு மனிதன் நம் சுத்தமான எனர்ஜிக்கான புரட்சியை நிறுத்த முடியாது” என ட்ரம்ப்பை நேரடியாக சாடியுள்ளார். சுற்றுச்சூழல் கெடுதியால் எத்தனையோ மக்கள் பாதிக்கப்படுவதை அவர் வீடியோ மெசேஜ் ஒன்றில் சுட்டிக்காட்டி ட்ரம்பை கண்டித்துள்ளார்.

ஒரு பொது ஊழியராக, அதிபரின் முதல் பொறுப்பு, “மக்களைப் பாதுகாப்பதாகும்”, 200,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மாசுபாடு பிரச்சினையால் உயிரிழப்பதாக அர்னால்டு கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*