சாவித்திரிக்காக கீர்த்தியை இப்படியா?

பிறப்பு : - இறப்பு :

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில் படமாகிறது. இந்த படத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதில், கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், சமந்தா நடிகை ஜமுனா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் மூலம் சாவித்ரியின் உடம்பு அளவுக்கு குண்டாக்க இருக்கிறார்களாம். ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷை உடல் எடையை அதிகரிக்கும் படி இயக்குனர் நாக் அஸ்வின் கூறியிருந்தாராம்.

ஆனால், படப்பிடிப்பு நெருங்கும் சமயத்திலும் கீர்த்தியின் உடல் எடை கூடவே இல்லையாம். இனிமேல், வேறு நடிகையை தேடி செல்லமுடியாது என்று நினைத்த படக்குழு, வேறு வழியில்லாமல் கீர்த்தி சுரேஷை வைத்தே படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்களாம்.

தற்போது கீர்த்தி சுரேஷ் இரட்டை ஜடை போட்டு அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சாவித்ரி சாயல் இருந்தாலும் அவரை போல் குண்டாக இல்லை என்ற ஒரு கருத்தும் சமூக வலைத்தளத்தில் பரவியது.

இதனால், ‘பாகுபலி-2’ படத்தில் அனுஷ்காவை கிராபிக்ஸ் முறையில் ஒல்லியாக மாற்றியதுபோல, இந்த படத்தில் ஒல்லியாக இருக்கும் கீர்த்தி சுரேஷை அதே முறையை பயன்படுத்தி குண்டாக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit