தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது! விபத்தில் காயங்களுடன் தப்பிய ஷாருக்கான்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்.

ஆனந்த எல். ராயின் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தில்,பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்து வருகிறார். மும்பை ஃபிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இன்று படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தப்போது, செட்டின் சீலிங் உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், அதிர்ஷ்டவசமாக ஷாருக்கான் சிறிய காயங்களுடன் உயிர்த்ப்பினார்.

மேலும், பட குழுவை சேர்ந்த இருவர் இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இதனால், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*