ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்த அன்சார் அல் ஷாரியா அமைப்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

லிபியாவில் கடந்த பல ஆண்டுகளாக செயற்பட்டுவந்த அன்சார் அல் ஷாரியா தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் ஐ.எஸ். அமைப்புக்கு மாறியதால் அந்த இயக்கம் கலைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

உலக நாடுகளின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் அன்சார் அல் ஷாரியா தீவிரவாத அமைப்பு தற்போது இணைந்துள்ளமை ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல் விஸ்தரிப்புக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளதென கூறப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டில் லிபிய அரசுப்படையினருக்கு எதிரான சண்டையின் போது அன்சார் அல் ஷாரியா தீவிரவாத அமைப்பின் தலைவர் மொஹமட் அஸஹாவி கொல்லப்பட்டார். இதன்பின்னர் சரிவை சந்தித்த குறித்த அமைப்பு தற்போது ஐ.எஸ். அமைப்புடன் கைகோர்த்துள்ளது.

லிபியாவின் முக்கிய நகரமான பென்காஸியில் செயற்பட்டு வந்த அன்சார் அல் ஷாரியா தீவிரவாத அமைப்பு, கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தூதரக அதிகாரிகளை கொன்றது உள்ளிட்ட பல தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் ஐ.நா. ஆகியன இந்த இயக்கத்தை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*