நாட்டையே உலுக்கிய சுவாதி கொலை.. திரைப்படமாக உருவானது

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை நாட்டையே உலுக்கியது. பட்டப்பகலில் கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுவாதி கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட ராம்குமார் என்று இளைஞர் புழல் சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். ராம்குமார் மின்வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.

சுவாதியை ராம்குமார் தான் கொலை செய்தாரா, ராம்குமார் இறந்தது எப்படி என்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு விடை கிடைக்காமலே இருக்கும் நிலையில் சுவாதி கொலை சம்பவம் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி சென்னை வடபழனி பிரசாத் லேப்பில் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளிவருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*