தலைவனாக இருந்தாலும்… டோனியிடம் அடிக்கடி ஆலோசனை கேட்ட கோஹ்லி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இங்கிலாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான பயிற்சி போட்டியின் போது இந்திய அணித்தலைவர் கோஹ்லி, டோனியிடம் அடிக்கடி சென்று ஆலோசனை கேட்டார்.

இங்கிலாந்தில் வரும் ஜுன் மாதம் 1-ஆம் திகதி சாம்பியன் டிராபி தொடர் நடைபெற உள்ளது.

இதற்காக விளையாடவுள்ள எட்டு அணிகளும் பயிற்சி போட்டியில் பங்கேற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய பயிற்சி போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் மோதின.

இப்போட்டியில் இந்திய அணி டாக்வெர்த் லிவிஸ் முறை படி 7-விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் போது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, முன்னாள் தலைவர் டோனியின் ஆலோசனையை அடிக்கடி கேட்டார்.

டோனியின் ஆலோசனை கோஹ்லிக்கு கைமேல் பலன் அளித்தது. இதனால் நியூசிலாந்து 189-ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*