விவசாயிகளை காப்பாற்ற முடியல.. இதுல மாடுகளை பாதுகாக்க போறிங்களா! அய்யாக்கண்ணு கேள்வி?

பிறப்பு : - இறப்பு :

பாஜக அரசு முதலில் விவசாயிகளை பாதுகாக்கட்டும் அதற்கு பின்னர் விவசாயிகளே மாடுகளை காப்பாற்றிக்கொள்வார்கள் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நேற்று மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இதனையடுத்து மாட்டிறைச்சிக்கு மாடுகளை இனிமேல் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.

இதனால் மாடு, பசு, ஒட்டகம், எருமை மாடுகளை வாங்கவோ விற்கவோ முடியாது. இந்நிலையில், மதுரையில்அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது: விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதில் விவசாயிகளை காப்பாற்ற மறுக்கும் அரசு மாடுகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

மேலும், நதிகள் இணைக்க வலியுறுத்தி வருகின்ற ஜூலை மாதம் 1000 விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த உள்ளோம்.

சாப்பிடுவதற்கு விவசாயிக்கே சோறு இல்லை, இதில் எப்படி மாடுகளை காப்பாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பினார். முதலில் விவசாயிகளை அரசு காக்கட்டும், அவர்களே மாடுகளை பாதுகாத்துக்கொள்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit