30 வயதை கடந்தும் ‘சிங்கிளா’வே சினிமாவில் கலக்கும் ஹீரோயின்கள் யாரெல்லாம் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

90 களில் எந்த டாப் ஹீரோயினும் அதிகபட்சம் 5 வருடங்கள்தான் தாக்கும்பிடிக்க முடியும். அதுக்கப்புறம் எல்லாரும் மூட்டை கட்டி போகவேண்டியதுதான். ஆனா இப்போ சினிமாவில் உண்டான பல மாற்றங்களில் ஹீரோயின்களின் சினிமா ஆயுளும் நீடித்துள்ளது.

த்ரிஷா, நயன் தாரா இருவரும் ட்ரெண்ட் செட்டராக மாறியது வரவேற்கக் கூடியது. 14 வருடங்களாக இன்னும் இந்த இருவரும் முண்ணனியில் இருப்பது சினிமா உலகில் அவ்வளவு சாதரணமல்ல. விருப்பட்டோ படாமலோ சினிமா ஹீரோயின்கள் பலருக்கும் திருமணம் என்பது தள்ளிப் போய்கொண்டிருக்கும் விஷயம். அப்படி யாரெல்லாம் இன்னும் லைஃபை சிங்கிளா மெயின்டெயின் பண்றாங்கன்னு பார்க்கலாமா?

த்ரிஷா :

த்ரிஷாவிற்கு 34 வயது. விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பின் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை இருமடங்காகியது. அவர் உடுத்திய காட்டன் சேலைகள் மற்றும் சுடிதார்களில் பெண்களே மனதை தொலைத்தார்கள்.

திரைப்பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்த முடிந்து திருமணத்தில் முடியாமல் , அவருடனான உறவு முறிந்தது. அதன் பின் தெலுங்கு திரைப்பட நாயகன் ராணாவுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் இருவருமே அதனைப் பற்றி வாய் திறக்கவில்லை. ” எனக்கான சரியான நேரம் வரும்போது நானும் மணம் செய்து கொள்வேன். அப்போது அதனைப் பற்றி பேசுவேன் என்று ஸ்டேட்மென்ட் விடுத்தார்.

அனுஷ்கா :

அனுஷ்கா விற்கு வயது 35. தெலுங்கு திரையுலகின் மகாராணி. அவருக்காக அவருடைய குடும்பத்தில் மாப்பிளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற சேதி வந்தாலும். பாகுபலி -2 க்கு பிறகு அவர் பிரபாஸுடன் கிசு கிசுக்கப்படுவது வைரலானது. இவர்கள் இருவருக்கு மட்டுமே எது உண்மை என்று தெரியும்.

நயன்தாரா :

நயனுக்கு வயது 33. தமிழ் நாட்டின் இனிய டோரா. அழகின் ராணி என்றால் அது நயன்தான். அவரளவிற்கு காதல் சர்ச்சைகளில் எந்த ஹீரோயினும் கிசுகிசுக்கப்படவில்லை. இருப்பினும் அவர்தான் கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார்.

சிம்புவுடன் இருந்த காதல் விரிசல் உண்டானது. பின்னர் அவர் பிரபு தேவாவுடன் திருமணம் வரை சென்று அந்த காதலும் சோகத்தில் முடிந்தது. அதன்பின் அவர் விக்னேஷ் சிவனை இரண்டு வருடமாக காதலித்து வந்தார். அவருடனும் இப்போது இணக்கமாக இல்லையென்று கோலிவுட்டில் சொல்லப்பட்டு வருகிறது.

நான் காதலை வெறுக்கிறேன். நான் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டேன். வாழ் நாள் முழுவதும் தனியாக வாழ்வதையே நான் விரும்புகிறேன் ” என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார். நூற்றில் ஒரு வார்த்தை

தபு :

தபுவிற்கு வயது 45. 90 களில் நடிக்க வந்தவர். அழகிய கண்கள் அதில் தெரியும் சோகமும் அவருடைய ஸ்பெஷல். காதல் தேசத்தில் வந்து எல்லாருக்கும் பிடித்த ஹோம்லி பெண்ணாக வலம் வந்தார். பாலிவுட்டின் செக்ஸியஸ்ட் சிங்கிள் என்ற பட்டப் பெயரும் அவருக்கு உண்டு.

அவர் நடித்த லைஃப் ஆஃப் பை படம் வன்டஹ்தவுடன் அவர் திருமணம் பற்றி இப்படி சொல்லியிருக்கிறார்… ” கல்யாணம் என்ற சடங்கிற்கு நாம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறேன். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் , சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் இருக்கும் ஒரு முக்கியமான உறவுமுறைதான் லைஃப் பார்ட்னர் ” என்று சொல்லியிருக்கிறார்

ஸ்ரேயா :

ஸ்ரேயாவிற்கு வயது 34. வாங்க பழகலாம் என்று இவர் யாரையும் இப்போது வரை கூப்பிடவில்லை. இதுவரை எந்த நடிகருடனும் கிசுகிசுக்கப்படாதவர். பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் வரை நடித்திருக்கிறார். அவருடைய சரியான துணைக்காகவும் சரியான நேரத்திற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*