இல்லாத இராமனால் கட்டப்படாத கற்பனைப் பாலம் இராமர் பாலம்?

பிறப்பு : - இறப்பு :

இலங்கையும் இந்தியாவும் குமரிக்கண்டத்தின் ஒரு பகுதியே!
இந்தியாவும் இலங்கையும் என்றும் பிரிந்திருக்காமல் கடல்மட்ட ஏற்றத் தாழ்வுகளைப் பொருத்து சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன. அதன் விவரம்

சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.
சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.
சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின்கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன.

இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும், இதன் வடகிழக்கே வங்காள விரிகுடா உள்ளது. இது இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து மன்னார் வளைகுடாவினால் துண்டிக்கப்பட்டுள்ள போதும், இதன் அமைவு இந்திய பாறைத்தட்டிலேயே உள்ளது. இராமர் அணை எனப்படும் நிலத்துண்டம், இலங்கையை இந்தியத் தலைநிலத்துடன் மத்தியகாலம் வரை இணைத்திருந்தது. இது 1480தாம் ஆண்டளவில் ஏற்பட்ட சூறாவளியில் ஊடறுக்கப்பட்டு, தற்போது இடையிடையே சுண்ணாம்புக் கற்பாறை தீவுத்தொடர்களைக் கொண்டவோர் மிகவும் ஆழம் குன்றிய நீர்ப்பரப்பாகவே காணப்படுகிறது.

இலங்கை உலகில் உள்ள மிகப் பழமை வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும். இந்திய பாறைத்தட்டின் மத்தியில் அமைந்துள்ளதால் எரிமலை, நிலநடுக்கம் போன்றவை இலங்கையை அனேகமாகப் பாதிப்பதில்லை. இதன் 90% ஆன நிலப்பரப்பு 2 பில்லியன் காலத்துக்கு முந்தைய பாறைதொடர்களில் அமைந்துள்ளது. மேலும் இந்தப் பாறைதொடர்களின் நடத்திய ஆராச்சிகளின் விளைவாக இந்தியத் துணைக்கண்டம் முன்பு குமரிக்கண்டமெனும் பெரியதொர் தென்நிலக் கண்டத்தின் பாகமாகவிருந்தது அறியப்படுகிறது. ஆனால் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உலகின் உள்ளார்ந்த அமுக்கங்களின் காரணமாக இந்தப் பாரிய கண்டம் பிளவுபட தொடங்கியது. பின்னர் 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட்ட இந்திய கண்டம் ஆசிய கண்டத்துடன் மோதி இமயமலைச்சாரல் எற்பட்டது. இது இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit