புகழ் பெற்ற நடிகை தாயின் பண ஆசை…. இறுதியில் மகளை பிணவறைக்கு கொண்டு சென்றது!!!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

acress

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கோரன்வாலா பகுதியைச் சேர்ந்தவர் பார்கவி. இவர் ஏராளமான சீரியல்கள் நடித்து அதன் பிறகு துணை நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி, முன்னணி கதாநாயகி அளவிற்கு உயர்ந்தார். இவர் நடித்த ’ஹாலிடேஸ்’ படம் ஹிட் ஆகி இவரின் மார்கெட் கடுமையாக உயர்ந்தது. நடிகை பார்கவி தனது தாயாருடன் ஹைதராபாத்தில், அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

நடிகை பார்கவி சினிமாவில் அறிமுகமாகும் முன்பு மேடைப் பாடகரான புஜ்ஜி என்கிற பிரவீனும் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் பிரவீண் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இதன் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதனைத்தொடர்ந்து குண்டூர் முன்னாள் டி.எஸ்.பியின் மகள் சுவப்ணா என்பவரை 2ம் திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு மேடைகளில் பிரவீண் பாடிய போது நடிகை பார்கவியின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் வறுமையில் இருந்த பார்கவிக்கு பிரவீண் பல்வேறு உதவிகளை செய்தார். இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.ஆனால் இந்தக் காதலை பார்கவியின் தாயார் ஏற்றுக் கொள்ளவில்லை. சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. இதனால் பார்கவி செல்வாக்கு உயர்ந்து விட்டால் பார்கவி அம்மா பிரித்து விடுவர் என்பதால் பிரவீண் 2006ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி நண்பர்கள் முன்னிலையில் பார்கவியை திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களின் பழக்கம் குறித்து செய்தி வெளிவர பார்கவி அம்மா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மகளை பிரவீணிடம் இருந்து பிரிக்க முன்னாள் மனைவி சுவப்ணா பெயரில் உள்ள சொத்துக்களை தனது மகள் பார்கவி பெயரில் மாற்றி தரவேண்டுமென பார்கவி அம்மா அவரிடம் அழுத்தம் கொடுத்தார். அதன் பிறகு சினிமாவில் கொடிகட்டி பறந்த பார்கவி மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்.

பிரபல நடிகரை அவருக்கு திருமணம் செய்ய உள்ளதாகவும், கை நிறையப் படங்கள் பார்கவிக்கு வந்ததால், தனது இமேஜ் பாதிக்கும் என்பதால் பார்ப்பவர்களிடம் எல்லாம் பிரவீண் கணவர் என கூறாமல், தாய்மாமா என்று அறிமுகப்படுத்தினார் பார்கவி அம்மா.

நாள்கள் செல்ல பார்கவி அம்மாவின் பேச்சை கேட்டு அவரை பிரிய தொடங்கினார். இது பிரவீணுக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதனால் கோபமடைந்த பிரவீண் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி வீட்டினுள் தனியாக இருந்த பார்கவிடம் வாக்குவாதம் செய்து தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மர்பகம்,கமுத்து, வயிறு உள்ளிட்ட பத்து இடங்களில் சரமாரியாக குத்தி கொலை செய்தார். போலீஸ் விசாரணைக்கு பயந்து பிரவீணும் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு ஆண் பெண்ணுடன் உயிருக்கு உயிராக இருந்து விட்டு திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும், என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பது கிடையாது, ஆரம்பத்தில் ஆண்கள் தான் பெண்களை ஏமாற்றி வந்தனர். இப்போது பெண்களும் கணவனை ஏமாற்றி வருகிறார்கள். திருமணத்திற்கு முன் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஆண்களுடன் காதல், தொடர்பு, திருமணத்திற்குப் பிறகும் அத்தகைய கூடா ஒழுக்கங்கள் இன்னும் தொடர்கின்றன.

பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட பார்கவியின் தாயாரின் பண ஆசை மகளை இந்த உலகத்தில் வாழ வீடாமலேயே செய்து விட்டது. சினிமாவின் அன்று முதல் இன்று வரை பணம், பொருள், சொத்து சேர்க்க வேண்டிய தங்கள் மகளின் ஆசை மற்றும் விருப்பங்களை சில நடிகைகளின் அம்மாக்கள் குழி தோண்டி புதைத்து விடுகிறார்கள். நடிகை பார்கவி பண ஆசை கொண்ட அம்மாகளுக்கு ஒரு பாடம்…

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit