ச்சீ அவ கூட நானா, முடியாது: கேன்ஸில் தீபிகா-சோனம் சண்டையால் நெளிந்த ஐஸ்வர்யா!!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்ற இடத்தில் நடிகைகள் சோனம் கபூர், தீபிகா படுகோனே சண்டையால் ஐஸ்வர்யா ராய்க்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அழகு சாதன நிறுவனமான லாரியலின் பிராண்ட் அம்பாசிடர்களாக உள்ளவர்கள் பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர். இந்த பட்டியலில் அண்மையில் சேர்ந்தவர் நடிகை தீபிகா படுகோனே.

லாரியல் சார்பில் 3 பேரும் பிரான்சில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.

ஐஸ்வர்யா ராய் சிவப்பு, பச்சை, கருப்பு நிற உடையணிந்து சிவப்புக் கம்பளத்தில் அழகு தேவதையாக நடந்து சர்வதேச மீடியாக்களின் பாராட்டுகளை பெற்றார்.

சோனம் கபூரும் அழகு அழகு உடைகளில் சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். ஐஸ்வர்யா ராய், சோனம் கபூருடன் ஒப்பிடும்போது தீபிகாவின் உடைகள் எடுபடவில்லை.

கேன்ஸ் வந்த இடத்தில் ஐஸ்வர்யா ராய், சோனம் கபூர், தீபிகாவை வைத்து ஒரு விளம்பரம் எடுக்க முடிவு செய்தது லாரியல் நிறுவனம். இதற்கு ஐஸ்வர்யா ஓகே சொல்லிவிட்டார்.

தீபிகாவுக்கும், சோனம் கபூருக்கும் ஆகாது. காரணம் நடிகர் ரன்பிர் கபூர். ரன்பிர் கபூர் ஒரு காலத்தில் சோனம் கபூரை காதலித்தார், அதன் பிறகு தீபிகாவை காதலித்தார். தீபிகாவுக்கும், கத்ரீனாவுக்கும் இடையே சண்டை ஏற்படவும் காரணம் ரன்பிர் தான். தீபிகாவை விட்டுவிட்டு கத்ரீனாவிடம் சென்றார் ரன்பிர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா, சோனம் கபூர் சேர்ந்து விளம்பரப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். இவர்களை சமாதானம் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்ட லாரியல் ஐஸ்வர்யா, சோனம், தீபிகாவை வைத்து தனித்தனியாக ஷூட் நடத்தி அதை ஒருங்கிணைத்து மூன்று பேரையும் ஒரு ஃபிரேமில் கொண்டு வர முடிவு செய்தது.

ஐஸ்வர்யா ராய்க்கும், சோனம் கபூருக்கும் கூட ஆகாது. ஐஸ்வர்யா ராயை சோனம் ஆன்ட்டி என்று கூறி கடுப்பேத்தினார். இருப்பினும் சோனமுடன் சேர்ந்து விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் ஐஸ்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*