இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக சுமை வந்து கொண்டிருந்தது: கோஹ்லி விளக்கம்!

பிறப்பு : - இறப்பு :

ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்பட்ட விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி லண்டன் சென்றடைந்தது.

லண்டன் சென்றதும் இந்திய அணி கேப்டன் சாம்பியன்ஸ் டிராபி தொடர் குறித்து பேட்டியளித்தார், அப்போது, கடைசி நிலை மிடில் ஆர்டர் துடுப்பாட்டக்காரர்களின் பங்களிப்பை வலுப்படுத்த வேண்டிய தேவை நமக்கு தேவை என்பது ஒரு முக்கியமான விஷயம்.

கடைசி இரண்டு ஆண்டுகளாக டோனி மீது அதிக அளவிளான சுமைகள் வந்து கொண்டிருந்ததாக நான் நினைக்கிறேன். அவர் தனக்குத்தானே முற்றிலுமாக வெளிக்கொண்டு வர முடியவில்லை.

ஏனென்றால், அவருடன் இணைந்து அணியை வெற்றிக்கொண்டு செல்லக்கூடிய சிறந்த வகையில் ஆட்டத்தை முடிக்கும் வீரர்களை பெற்றிருக்கவில்லை.

கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அந்த இடத்தில் நமக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள். அதிலும் ஹர்திக் பாண்டியா நமக்கு மிகவும் அழகான பலம் என கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit