இனி கவர்ச்சி தான்; தமன்னா அதிரடி முடிவு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தி சினிமா பெரிதாக கைகொடுக்காததால் மீண்டும் தமிழ், தெலுங்கிற்கு வந்து விட்டார் தமன்னா. தமிழில் ஆர்யாவின் புதிய படமான வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் நடித்து வருபவர், தெலுங்கில் பாகுபாலி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு தெலுங்கில் கவர்ச்சி ஆயுதத்தை முன்வைத்து நடித்த தமன்னா இந்த படத்தில் வாள் என்ற ஆயுதமேந்தி நடித்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், தெலுங்கில் முழுவீச்சில் நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட சில நடிகைகளின் கவனம் தற்போது தமிழ் சினிமா பக்கம் திரும்பியிருப்பதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுததி ஆந்திராவில் இன்னும் அதிகப்படியான படங்களை கைப்பற்றுவதில் தீவிரமடைந்திருக்கிறாராம் தமன்னா.

அதேசமயம், அஞ்சான், கத்திக்கு பிறகு தமிழில் பத்து எண்றதுக்குள்ள படத்தில் மட்டுமே நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் அதிகப்படியான படஙகளை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டுவதால், இப்போது தமன்னா, சமந்தாவுக்கிடையே தொழில் போட்டி தீவிரமடைந்திருக்கிறதாம். அதனால், முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்பு என்றால், இரண்டு நடிகைகளுமே நான் நீ என்று வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதைப்பயன்படுத்தி இரண்டுபேரில் யார் குறைவான சம்பளத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்களோ அவர்களுககு முன்னுரிமை கொடுத்து புக் பண்ணுகிறார்களாம் ஆந்திராவிலுள்ள படஅதிபர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*